“கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்” ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறியிருந்தார். அதாவது, "புதிய பொறுப்பை ஏற்றுள்ள எனது சகோதரர் ராகுல் காந்திக்கு I.N.D.I.A கூட்டணி சார்பில் வரவேற்கிறேன். அவரது குரல் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும்" என தனது எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் பதவிட்டிருந்தார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, " என் அன்புச் சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல்: எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறியிருந்தார். அதாவது, “புதிய பொறுப்பை ஏற்றுள்ள எனது சகோதரர் ராகுல் காந்திக்கு I.N.D.I.A கூட்டணி சார்பில் வரவேற்கிறேன். அவரது குரல் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும்” என தனது எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் பதவிட்டிருந்தார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ” என் அன்புச் சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் கேட்கப்படுவதை உறுதி செய்வோம். மேலும், நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டள்ள கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
Thank you, my dear brother Thiru @mkstalin
We will ensure every voice in India, from South to North, finds utterance in Parliament, and strengthens the federal structure as enshrined in our Constitution. https://t.co/BH4rpPzj4d
— Rahul Gandhi (@RahulGandhi) June 26, 2024
Also Read: கைப்பிடித்து கூட்டிப்போன மோடி, ராகுல் காந்தி.. மீண்டும் மக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா!
எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி:
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியான I.N.D.I.A கூட்டணி 232 இடங்களில் வென்றது. காங்கிரஸ் மட்டும் 99 இடங்களை கைப்பற்றியது. கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என கூறப்பட்ட நிலையில், அதனை எல்லாம் பொய்யாக்கியுள்ளது. கடந்த 2014 தேர்தலில் 44 இடங்களிலும், 2019 தேர்தலில் 52 தொகுதிகளிலும் வென்ற காங்கிரஸ், 2024 தேர்தலில் 99 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. மக்களவையில் எந்த கட்சி 10 சதவீத இடங்களில் வெற்றி பெறுகிறதோ அதாவது 54 இடங்களில் வெல்கிறதோ அந்தக் கட்சிக்கே அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும்.
2014 மற்றும் 2019 தேர்தல்களில் காங்கிரஸ் உட்பட எந்த கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காத நிலையில், இந்த முறை 99 இடங்களில் வென்று காங்கிரஸ் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் இத்தனை இடங்களில் வெல்ல ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை முக்கிய காரணமாக இருப்பதாக கருதப்படுகிறது. எனவே, அவரே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் சரியாக இருக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதினர்.
இதுகுறித்து பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்தது. இந்த நிலையில், நேற்று எதிர்க்கட்சி தலைவராக நேற்று ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read: நண்பர்களுக்கு ரயில் டிக்கெட் புக் செய்தால் சிறையா? எது உண்மை.. விளக்கிய ஐஆர்சிடிசி!