5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“வெற்றி, தோல்வி சகஜம்” ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக களத்தில் குதித்த ராகுல் காந்தி!

பாஜகவின் ஸ்மிருதி இரானிக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் சகஜம். ஸ்மிருதி இரானி அல்லது வேறு எந்தத் தலைவரையும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், மோசமாக நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“வெற்றி, தோல்வி சகஜம்” ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக களத்தில் குதித்த ராகுல் காந்தி!
ராகுல் காந்தி – ஸ்மிருதி இரானி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 17 Oct 2024 10:46 AM

ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக களத்தில் குதித்த ராகுல்:  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சில கருத்தை கூறியுள்ளார்.  இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, “பாஜகவின் ஸ்மிருதி இரானிக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் சகஜம். ஸ்மிருதி இரானி அல்லது வேறு எந்தத் தலைவரையும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், மோசமாக நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் மக்களை இழிவுபடுத்துவதும் அவமதிப்பதும் பலம் அல்ல. பலவீனத்தின் அறிகுறி” என குறிப்பிட்டுள்ளார். அமேதி தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, ஸ்மிருதி இரானி சமூக ஊடகங்களில் தொடர்ந்து ட்ரோல் செய்யப்பட்டார். இதைக் கருத்தில் கொண்டு ராகுல் காந்தி இந்த வேண்டுகோளை அனைவருக்கும் விடுத்துள்ளார்.

Also Read: “ஆதார் இருந்தா என்னை பார்க்க வாங்க” பொதுமக்களுக்கு கண்டிஷன் போட்ட கங்கனா ரனாவத்!

அரசு பங்களா ஒதுக்கீடு விவகாரம்:

ஸ்மிருதி இரானியுடன், நான்கு முன்னாள் மத்திய அமைச்சர்களும் டெல்லியில் உள்ள தங்கள் அரசு பங்களாவை காலி செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சர்களுக்கு அரசு பங்களா ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு 3வது பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த பங்களாவில் முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு சொந்தமாக இருந்தது. அதேபோல முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானி 28 துக்ளக் கிரசன்ட் பகுதியில் அமைந்துள்ள அரசு பங்களாவை காலி செய்தார். தேர்தலில் தோல்வி அடைந்து அரசு பங்களாவை காலி செய்த ஸ்மிருதி இரானி குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

2019ல் வெற்றி, 2024ல் தோல்வி:

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸின் கிஷோரி லால் சர்மா களமிறங்கினார். இதில், 1.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானியை தோற்கடித்தார் காங்கிரஸ் கட்சியின் கிஷோரி லால் சர்மா. கடந்த 2019ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி 4.65 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்தார் ஸ்மிருதி இரானி. அதேநேரம் 2019ல் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வென்றதன் மூலம் நாடாளுமன்றத்திற்கு சென்றார்.

Also Read: ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினம்.. மத்திய அரசு அறிவிப்பு

Latest News