“அதானி, அம்பானி வீட்டுக்கு ED அனுப்புங்கள்” ராகுல் காந்தி பதிலடி!
அதானி, அம்பானி வீட்டிற்கு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை அனுப்புங்கள் என்று ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
அதானி குறித்து முதல்முறையாக வாய் திறந்த பிரதமர்
தெலங்கான மாநிலத்தில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பல குற்றச்சாட்டுகளை எழுப்பினார். அவர் கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி) ஒன்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். ரஃபேல் விவகாரம் கைகொடுக்கவில்லை என்றதும் புதிய முழக்கத்தைத் தொடங்கினார்.
ஐந்து ஆண்டுகளாக அம்பானி, அதானி குறித்து முழக்கமிட்டிருந்தார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து அம்பானியையும் அதானியையும் பற்றி பேசுவதை அவர் நிறுத்திவிட்டார்.
Also Read : வேட்டுவைத்த சுயேச்சைகள்.. ஹரியானாவில் பாஜக அரசு கவிழ்கிறதா?
ஏதோ தவறாக உள்ளது. நீங்கள் அம்பானி, அதானி பற்றி ஐந்து வருடங்களாக விமர்சித்து வந்தீர்கள். பின்னர் அது ஒரே இரவில் நிறுத்தப்பட்டது ஏன்? எவ்வளவு கறுப்புப் பணம் உள்ளது? காங்கிரசுக்கு டெம்போக்கள் நிரம்பியதா? போடப்பட்ட ஒப்பந்தம் என்ன? ஒரே இரவில் அம்பானி-அதானியை அசிங்கப்படுத்துவதை ஏன் நிறுத்தினீர்கள்? என்று சொல்லுங்கள்” என்றார் பிரதமர் மோடி.
“மோடி பயந்துவிட்டீர்களா?”
இதற்கு பதிலடி கொடுத்து ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், “வணக்கம் மோடிஜி, நீங்கள் பயப்படுகிறீர்களா? பொதுவாக நீங்கள் மக்களுக்கு பின்னால் அம்பானி, அதானி குறித்து பேசுவீர்கள்.
முதன்முறையாக பொதுவெளியில் அதானி, அம்பானி பற்றி பேசுகிறீர்கள். அவர்கள் டெம்போக்களில் பணம் தருகிறார்கள் என்று நீங்கள் பேசியுள்ளீர்கள். அது உங்கள் தனிப்பட்ட அனுபவமா? அப்படி பணம் கொடுத்தார்கள் என்றால் அவர்களின் வீடுகளுக்கு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை அனுப்புங்கள்.
விரைவில் விசாரணை நடத்துங்கள். இந்த தொழிலதிபர்களுக்கு மோடி எவ்வளவு பணம் கொடுத்தாரோ, அந்த தொகையை காங்கிரஸ் நாட்டின் எழைகளுக்கு வழங்கும்” என்றார்.
Also Read : “ஆப்பிரக்கர்களை போலிருக்கும் தென்னிந்தியர்கள்” காங்கிரஸ் மூத்த தலைவர் மீண்டும் சர்ச்சை!