துண்டு துண்டாக கிடந்த பெண் சடலம்.. நடுங்க வைக்கும் கொடூர கொலை.. ஷாக்! - Tamil News | rajasthan women beautician missing killed body parts chopped jodhpur | TV9 Tamil

துண்டு துண்டாக கிடந்த பெண் சடலம்.. நடுங்க வைக்கும் கொடூர கொலை.. ஷாக்!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதான பெண், இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில், இன்று ஜோத்பூரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 6 துண்டுகளாக வெட்டப்பட்ட பிளாஸ்டிக் கவரில் தூக்கி வீசப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துண்டு துண்டாக கிடந்த பெண் சடலம்.. நடுங்க வைக்கும் கொடூர கொலை.. ஷாக்!

கொலை செய்யப்பட்ட பெண் (picture credit: Twitter)

Updated On: 

31 Oct 2024 09:47 AM

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதான பெண், இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில், இன்று ஜோத்பூரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 6 துண்டுகளாக வெட்டப்பட்ட பிளாஸ்டிக் கவரில் தூக்கி வீசப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான அனிதா சவுத்ரி.

துண்டு துண்டாக கிடந்த பெண் சடலம்

இவர் அதே பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி அனிதா சவுத்ரி பிற்பகல் 2.30 மணியளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்ல புறப்பட்டார். ஆனால், இரவு வரை அனிதா சவுத்திரி வீட்டில் திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் மன்மோகன் சவுத்ரி, ஜோத்பூரில் உள்ள காவல் நிலையத்தில் காணவில்லை என்று புகார் அளித்தார். இதனை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அனிதா சவுத்ரி அழகு நிலையம் அமைந்துள்ள அதே கட்டிடத்தில் கடை வைத்திருப்பவர் குலாமுதீன். இவருக்கு அனித சவுத்ரி வழக்கம் ஏற்பட்டது. இதனால் சவுத்ரியின் செல்போனை போலீசார் டிராக் செய்ததில் குலாமுதீனிடம் கடைசியாக பேசியது தெரியவந்தது.

Also Read : மயோனைஸ் பயன்படுத்த ஓராண்டிற்கு தடை.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.. இதுதான் காரணமா?

நடுங்க வைக்கும் கொடூர கொலை

மேலும், அனிதா சவுத்ரி கடையை புட்டிவிட்டு, ஆட்டோவில் சென்றது தெரியவந்துள்ளது. அதனால் அந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் அனிதா சவுத்ரியை கங்கனா பகுதியில் விட்டு சென்றதாக கூறினார். இதனை அடுத்து, அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அங்கு குல் முகமது வீட்டை கண்டுபிடித்தனர். அங்கு அவர் குல் முகமதுவின் மனைவியிடம் விசாரணை நடத்தியதில், அவர் மூன்று நாட்களாக தனது சகோதரரின் வீட்டில் இருந்தாக கூறினார்.   இதனால் தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார் சில தகவல்களை கூறினர்.

அதிர்ச்சி காரணம்:

அதன்படி, குல் முகமது வீட்டிற்குத் திரும்பியபோது, ​​​​அனிதாவைக் கொன்று அவரது உடலை வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இதனை அறிந்த போலீசால் குல் முகமது வீட்டிற்கு சென்று சடலத்தை தோண்டி எடுத்தனர்.

Also Read : சிகிச்சைக்கு வந்த பெண்.. மயக்க மருத்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்.. அதிர்ச்சி சம்பவம்!

புல்டோசர் மூலம் 12 அடி குழி தோண்டி பெண்ணின் உடலை மீட்டனர். அதில் கை, கால்கள் என உடல் முழுவதும் 6 துண்டுகளாக வெட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது தாயை ஏமாற்றியதால் குல் முகமது, அனிதா சவுத்திரியை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குல் முகமதுவை தேடி வருகின்றனர். பெண் ஆறு துண்களாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்!
தீபாவளி நாளில் செய்யக்கூடாத விஷயங்கள்..!
எண்ணெய் அதிகம் இழுக்காமல் வடை சுடுவது எப்படி?
உங்கள் மொபைல் போனை எப்போது மாற்ற வேண்டும் - தெரிஞ்சிக்கோங்க!