5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரஷ்யா உக்ரைன் போர்.. இந்திய பொருளாதாரம் சந்தித்த மறைமுக சிக்கல்கள் என்ன?

ரஷ்யா-உக்ரைன் போர்: கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வருகிறது. மூன்று ஆண்டுகளாக இந்த போர் நடந்து வருகிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து பிற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். குழந்தைகளின் கல்வி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல இன்னல்கள் சந்தித்து வருகின்றனர்.

ரஷ்யா உக்ரைன் போர்.. இந்திய பொருளாதாரம் சந்தித்த மறைமுக சிக்கல்கள் என்ன?
ரஷ்யா உக்ரைன் போர் (Photo Credit: PTI/AP)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Sep 2024 16:47 PM

ரஷ்யா – உக்ரைன் போர்: கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வருகிறது. மூன்று ஆண்டுகளாக இந்த போர் நடந்து வருகிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து பிற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். குழந்தைகளின் கல்வி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல இன்னல்கள் சந்தித்து வருகின்றனர். போரை நிறுத்த இந்தியா உள்ளிட்ளட உலகின் பல நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கின. இருப்பினும், ரஷ்யா போர் நிறுத்தம் செய்ய தொடர்ந்த மறுத்தே வருகிறது. இந்த போரினால் உலக நாடுகளுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. எரிவாயு, கோதுமை, உரம் விற்பனை ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ரஷ்யா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். மேற்கத்திய நாடுகள் அதன் மீது பொருளாதார தடைகளை விதித்தாலும் உலகளாவிய எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ரஷ்யாவின் எரிசக்தியை நம்பி இருக்கும் ஐரோப்பிய நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் உலகளவில் எண்ணெய்யின் தேவை அதிகரித்ததால் ஐரோப்பிய நாடுகள் விலையை உயர்த்தின. கிட்டதட்ட 80 சதவீதம் வரை கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடான இந்தியா கடுமையாக பொருளாதார அச்சுறுத்தலாக அமைந்தது. குறிப்பாக இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் உற்பத்தி, விலையில் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. ஆனால் இந்தியா இதை திறம்பட கையாண்டது என்றே சொல்லலாம்.

Also Read: சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!

என்னென்ன பிரச்னைகள்?

மற்ற பொருட்களை காட்டிலும் எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தது. ஒரு பீப்பாய்க்கு 70 டாலர் முதல் 120 டாலர் வரை உயர்ந்தது. இதனால் ஏரிபொருள் இறக்குமதி அதிக அளவில் பாதித்தது. இது இந்தியாவை நேரடியாக பாதித்து இருக்கும். குறிப்பாக போக்குவரத்து செலவு, உற்பத்தி, விவசாயம் வரை அனைத்து துறைகளில் பாதிக்கும் சூழல் இருந்தது. மற்ற பொருட்களை காட்டிலும் எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தது. ஒரு பீப்பாய்க்கு 70 டாலர் முதல் 120 டாலர் வரை உயர்ந்தது. இதனால் ஏரிபொருள் இறக்குமதி அதிக அளவில் பாதித்தது. இது இந்தியாவை நேரடியாக பாதித்து இருக்கும். குறிப்பாக போக்குவரத்து செலவு, உற்பத்தி, விவசாயம் வரை அனைத்து துறைகளில் பாதிக்கும் சூழல் இருந்தது.  ஆனால் இதனை இந்தியா சிறப்பாக கையாண்டது என்றே சொல்லலாம்.

மத்திய அரசு எடுத்த நடவடிக்கை:

இந்த போரினால் பொருளாதார வீழ்ச்சியல் இருந்து விவசாயிகள், நுகர்வோரை பாதுகாக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துது. இதற்காக மத்திய அரசு மானிய திட்டங்களை கொண்டு வந்தது. எண்ணெய் மானியங்கள் மூலம் எரிபொருள் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விலையும், குறிப்பாக வாகன போக்குவரத்து விலையும் கட்டுப்படுத்தப்பட்டது.

அதேபோல, கச்சா எண்ணெய்யை உரிய நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தியது இந்தியா.  இதனால் பெட்ரோல், டீசல் விலையும் கட்டுக்குள் இருந்தது. அதேசமயம் விவசாயிகளுக்கான உர விலையும் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது வரை எண்ணெய் மற்றும் யூரியாவின் விநியோகம் பாதிக்காமல் இந்திய பாதுகாத்து வருகிறது என்று கூறப்படுகிறது. மேலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் வலுவான உறவை பேணுவதன் மூலம் விலைவாசி உயராமல் இந்தியா கவனித்து வருகிறது.

Also Read: செம்ம சான்ஸ்.. ஆதார் கார்ட்டை அப்டேட் செய்ய கூடுதல் அவகாசம்.. சீக்கிரம் வேலைய முடிங்க!

குறிப்பாக எண்ணெய் மற்றும் யூரியா ஆகிய இரண்டின் இறக்குமதி பாதிக்காமலும் பார்த்து வருகிறது. அண்மையில் கூட பிரதமர் மோடி ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். ஜூலை மாதத்தில் ரஷ்யா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. கடந்த மாதம் உக்ரைனுக்கு சென்றார் பிரதமர் மோடி. அங்கு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து போர் சூழல் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிகிறது. மேலும், இந்தியா யாருக்கும் ஆதரவாக இல்லை நடுநிலையாகவே இருக்கிறது என்பதை தெரிவிக்கும் வகையிலேயே மோடி உக்ரைன் சென்றதாக கூறப்படுகிறது.

Latest News