5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Special Trains: சபரிமலை சீசன் எதிரொலி.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Sabarimala: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்ற நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெகு தொலைவிலிருந்து வரும் பக்தர்கள் பெரும்பாலும் ரயில்களில் பயணம் செய்து சபரிமலை செல்வது வழக்கம். வழக்கமாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் காலியாகி விட்ட நிலையில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயிலானது இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Special Trains: சபரிமலை சீசன் எதிரொலி.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 15 Nov 2024 10:38 AM

சிறப்பு ரயில்கள்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்ற நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெகு தொலைவிலிருந்து வரும் பக்தர்கள் பெரும்பாலும் ரயில்களில் பயணம் செய்து சபரிமலை செல்வது வழக்கம். வழக்கமாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் காலியாகி விட்ட நிலையில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயிலானது இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவும் தொடங்கி விட்டது.

Also Read: கார்த்திகை பௌர்ணமி.. சிவன் அருள் பெற வீட்டில் செய்ய வேண்டிய பூஜை முறைகள்!

சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு

  •  நவம்பர் மாதம் 20, 27 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் 4,11,18,25 ஆகிய தேதிகளிலும், ஜனவரி 1, 8, 15 ஆகிய தேதிகளிலும் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்தும், இதேபோல் கொல்லத்தில் இருந்து நவம்பர் 21, 28 ஆகிய தேதிகளிலும்,  டிசம்பர் மாதம் 5,12,19,26  ஆகிய தேதிகளிலும், ஜனவரி 2,9,16 ஆகிய தேதிகளிலும்  இந்த சிறப்பு ரயிலானது இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலானது முழுக்க ஏசி வசதி கொண்ட பெட்டிகளை உள்ளடக்கியது என கூறப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து மதியம் 3.10 மணிக்கு புறப்பட்டு ரயில் மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். இதே போல் கொல்லத்தில் இருந்து காலை 10:45 மணிக்கு புறப்பட்டு ரயில் மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதே போல் சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்திற்கு நவம்பர் 23, 30 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும், ஜனவரி 4, 11, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொல்லத்தில் இருந்து நவம்பர் 24 மற்றும் டிசம்பர் 1,8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும்,  ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளிலும் சென்னை சென்ட்ரலுக்கு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்குறிப்பிட்ட தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2:30 மணிக்கு கொல்லம் சென்றடையும் அதேபோல் கொல்லத்தில் இருந்து.மாலை 5.50  மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Sabarimala: மண்டல பூஜைக்காக சபரிமலை கோயிலில் இன்று நடைதிறப்பு.. குவியும் ஐயப்ப பக்தர்கள்!

  • மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 19, 26 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் 3, 10, 17, 24,31 ஆகிய தேதிகளிலும், ஜனவரி 7, 14 ஆகிய தேதிகளிலும் கொல்லத்திற்கு மற்றுமொரு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஆனது இரவு 11.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 2.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். அதே சமயம் மறு மார்க்கமாக 4.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது கொல்லத்திலிருந்து நவம்பர் 20,27  ஆகிய தேதிகளிலும், டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், ஜனவரி 1, 8, 15 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ரயிலானது பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், எட்டுமன்னூர், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், காயங்குளம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைதிறப்பு

சபரிமலை சீசனை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மதியம் ஒரு மணி முதல் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதேசமயம் நடப்பாண்டும் சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பாட் புக்கிங் முறையும் மூன்று இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. பக்தர்கள் சரியான நேரத்தில் தரிசனத்திற்கு வந்து குறிப்பிட்ட நேரத்தில் மலையிலிருந்து கீழே இறங்கி விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் முன்பதிவு செய்த தேதிகளில் பயணம் செய்ய முடியாவிட்டால் உடனடியாக அந்த தரிசன முன்பதிவை ரத்து செய்ய வேண்டும். பின்னர் புதிதாக மீண்டும் முன்பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யாமல் மீண்டும் முன்பதிவு செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது

Latest News