5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“ஆப்பிரக்கர்களை போலிருக்கும் தென்னிந்தியர்கள்” காங்கிரஸ் மூத்த தலைவர் மீண்டும் சர்ச்சை!

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போல உள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார்.

“ஆப்பிரக்கர்களை போலிருக்கும் தென்னிந்தியர்கள்” காங்கிரஸ் மூத்த தலைவர் மீண்டும் சர்ச்சை!
சாம் பிட்ரோடா
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 May 2024 15:32 PM

காங்கிரஸ் மூத்த தலைவர் மீண்டும் சர்ச்சை!

பிரபல தொழிலதிபரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சாம் பிட்ரோடோ தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நாட்டு மக்கள் 75 வருடங்கள் மிகவும் மகிழ்ச்சியான சூழலில் வாழ்ந்தனர்.

அங்கும் இங்கும் சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். இந்தியாவைப் போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டை நாம் ஒன்றிணைக்க முடியும்.

கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள்.

Also Read : “இப்ப ஏன் அதானி பத்தி பேசாம இருக்கீங்க?” பிரதமர் மோடி அட்டாக்!

நாம் அனைவரும் வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு மதங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் உணவை மதிக்கிறோம். அதுதான் நான் நம்பும் இந்தியா” என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து சாம் பிட்ரேடா பேசியது தவறானது. ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த கருத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாது. இதில் இருந்து முற்றிலும் விலகிக் கொள்கிறது” என்றார்.

கண்டனம்:

மேலும், சாம் பிட்ரேடாவின் கருத்தை பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்ச்த்திருந்தனர். அதன்படி, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “நான் வடகிழக்கைச் சேர்ந்தவன். நான் ஒரு இந்தியனாகத் தெரிகிறேன்.

நாம் அனைவரும் வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் நாம் அனைவரும் ஒன்று தான். தயவுசெய்து நமது நாட்டைப் பற்றி ஏதாவது புரிந்து கொள்ளுங்கள்” என்றார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவள். ராகுல் காந்தியின் வழிகாட்டியான இனவெறியர்களுக்கு, நாங்கள் அனைவரும் ஆப்பிரிக்கராகத் தெரிகிறோம்.

சீனர்கள், அரேபியர்கள் மற்றும் வெள்ளையர்களே, உங்கள் மனநிலையையும் உங்கள் அணுகுமுறையையும் வெளிப்படுத்தியதற்கு நன்றி” என்றார்.  ஏற்கனவே, அமெரிக்காவின் மரபு வழி சொத்துவரி குறித்து இந்தியாவிலும் விவாதிக்க வேண்டும் என்று சாம் பிட்ரோடா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மீண்டும் அவர் சர்சைக்குரிய கருத்தை பேசியது தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Also Read : திண்டாடும் பொருளாதாரம்..”தயவு செய்து வாங்க..” இந்தியர்களிடம் கோரிக்கை வைத்த மாலத்தீவு அமைச்சர்!

 

Latest News