5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கொளுத்திப்போட்டட சாம் பிட்ரோடா! “காங்கிரஸ் கூட்டணியை முறிக்க ஸ்டாலின் தயாரா?” பிரதமர் மோடி கேள்வி

காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள தைரியம் இருக்கா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.

கொளுத்திப்போட்டட சாம் பிட்ரோடா! “காங்கிரஸ் கூட்டணியை முறிக்க ஸ்டாலின் தயாரா?” பிரதமர் மோடி கேள்வி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 09 May 2024 07:58 AM

சர்ச்சையை கிளப்பும் சாம் பிட்ரோடா:

நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நான்காம் கட்ட வாக்குப்பதிவுக்கு அரசியில் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படியான நிலையில், பிரபல தொழிலதிபரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சாம் பிட்ரோடோ சர்ச்சைக்குரிய கருத்தை பேசியிருந்தார்.  தென்னிந்தியர்கள் ஆப்பிரக்கர்களைப் போல உள்ளதாக இவர் கூறியது தேசிய அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையில் பேசியிருக்கிறார். மத்திய பிரதேச பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஒரு பெரிய தலைவர் காங்கிரஸின் பிளவு மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

Also Read : “ஆப்பிரக்கர்களை போலிருக்கும் தென்னிந்தியர்கள்” காங்கிரஸ் மூத்த தலைவர் மீண்டும் சர்ச்சை!

ஸ்டாலினுக்கு சவால் விட்ட மோடி:

காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவரும், ராகுல்காந்தியின் மிகப்பெரிய ஆலோசகருமான கூறியிருக்கிறார். இது மிகவும் வெட்கக்கேடானது. கிழக்கு இந்தியாவில் உள்ளவர்கள் சீனர்களை போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருக்கிறார்கள் என்று கூறினார்.

கர்நாடகா, தெலுங்கானா போன்ற காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் இதுபோன்ற கருத்தை ஏற்கமுடியுமா? தமிழக முதல்வர் தமிழ் கலாச்சாரம் பற்றி பேசி வருகிறார்.

தமிழ்நாட்டின் கலாச்சாரம் பற்றி தொடர்ந்து பேசும் முதல்வர் ஸ்டாலினிடம் கேட்க விரும்புகிறேன். இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு, தமிழர்களின் சுயமரியாதைக்காக காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக முறித்துக் கொள்ளுமா? உங்களுக்கு தைரியம் இருக்கிறதா” என்று கேள்வி எழுப்பினார்.

நாட்டை துண்டு துண்டாகப் பார்ப்பது காங்கிரஸின் மனநிலை. அதனால்தான் காங்கிரஸ் தலைவர்கள் ஒரே நாடாகக் கருதி பிரிவினையைப் பேச மறுக்கிறார்கள்” என்றார்.

Also Read : வேட்டுவைத்த சுயேச்சைகள்.. ஹரியானாவில் பாஜக அரசு கவிழ்கிறதா?

சாம் பிட்ரோடா சொன்னது என்ன?

பிரபல தொழிலதிபரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சாம் பிட்ரோடோ தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நாட்டு மக்கள் 75 வருடங்கள் மிகவும் மகிழ்ச்சியான சூழலில் வாழ்ந்தனர்.

அங்கும் இங்கும் சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். இந்தியாவைப் போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டை நாம் ஒன்றிணைக்க முடியும்.

கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள்.

நாம் அனைவரும் வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு மதங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் உணவை மதிக்கிறோம். அதுதான் நான் நம்பும் இந்தியா” என்றார்.

ஏற்கனவே, அமெரிக்காவின் மரபு வழி சொத்துவரி குறித்து இந்தியாவிலும் விவாதிக்க வேண்டும் என்று சாம் பிட்ரோடா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மீண்டும் அவர் சர்சைக்குரிய கருத்தை பேசியது தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Latest News