சம்பல் வன்முறை.. 4 பேர் மரணம்.. மசூதி ஆய்வில் நடந்தது என்ன?

Sambhal violence over mosque survey: உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள மசூதியை ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர். சமாஜ்வாதி எம்.பி, மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பல் வன்முறை.. 4 பேர் மரணம்.. மசூதி ஆய்வில் நடந்தது என்ன?

சம்பல் வன்முறை

Updated On: 

25 Nov 2024 15:30 PM

உத்தப் பிரதேச மாநிலம் சம்பலில் ஷாகி ஜமா மஜ்ஜித் அமைந்துள்ளது. இந்த மசூதியை ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, நடந்த வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, அதிகாரிகள் மசூதியை ஆய்வு செய்ய சென்றனர். அப்போது, 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி மசூதியை ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த விவகாரத்தில் சம்பல் தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜியா உர் ரஹ்மான் பார்க் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ ஒருவரின் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

800 பேர் மீது புகார் பதிவு

இது குறித்து பேசிய மொராதாபாத் போலீஸ் கமிஷனர் ஆஞ்சனேய குமார் சிங், “திங்கள்கிழமை (நவ.25, 2024) நடந்த சம்பல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சமாஜ்வாதி கட்சி எம்பி மற்றும் உள்ளூர் எம்எல்ஏவின் மகன் ஒருவரும் அடங்குவர். மேலும் வன்முறை நடந்த இடத்தில் இப்போது நிலைமை அமைதி திரும்பியுள்ளது” என்றார்.
இது தொடர்பான கூட்டு செய்தியாளர் சந்திப்பில், சம்பல் எஸ்பி கிருஷ்ண குமார் பிஷ்னோய், “வன்முறைக்குப் பிறகு 800 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க :  உத்தர பிரதேசத்தில் பதற்றம்.. அதிகாரிகள் மீது கல்வீச்சு.. மசூதியில் ஆய்வுக்கு சென்றபோது மோதல்!

வன்முறை ஏன்?

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் ஷாகி ஜமா மசூதியில் இரண்டாவது ஆய்வுக்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கமிஷனர் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த 6 பேர் சென்றனர்.
அப்போது, அங்கு மோதல் வெடித்தது. நவம்பர் 19 அன்று நீதிமன்ற உத்தரவுப்படி முதல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த இடத்தில் இந்துக் கோவில் இருந்ததாகவும், அதனை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாகவும் வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு குழு ஆய்வு நடத்த சென்றது. இதனை தடுக்க சம்பவ இடத்தில் கிட்டத்தட்ட 1,000 இஸ்லாமியர்கள் வரை கூடியதாக கூறப்படுகிறது.

ராகுல், அகிலேஷ் யாதவ் கண்டனம்

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி யோகி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “யோகி அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்னைகளில் கவனம் செலுத்துகிறது. இந்த அவசர அணுகுமுறை துரதிருஷ்டவசமானது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் யோகி அரசுக்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பிரியங்கா காந்தி எம்.பி ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க பதில்

இந்த விவகாரத்தில் பதிலளித்த மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங், “எதிர்ப்பு காரணமாக இந்த சம்பவம் நடந்தது, இது கோத்ரா சம்பவம் போல் எதிர்க்கட்சிகளின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட உத்தி. இது கணக்கெடுப்பு குழு மீதான தாக்குதல் அல்ல, இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். அவர்கள் நாட்டை எரிக்க நினைக்கிறார்கள்.
சம்பாலை வங்கதேசமாக மாற்ற விரும்புகிறார்கள். இறந்தவர்கள், தாக்குதல்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் போலீஸ் அல்ல என்பது பிரேத பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. இந்த வன்முறையை நாடு பொறுத்துக்கொள்ளாது” என்றார்.

பாராளுமன்றத்தில் எதிரொலித்தல்

இன்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடிய நிலையில் சம்பல் வன்முறை எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Accident: கூகுள் மேப் காட்டிய வழி.. பாலத்தில் இருந்து கவிழ்ந்த கார்.. 3 பேர் பலி!

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?