5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Uttar Pradesh: உ.பி.,யில் அசைவம் கொண்டு வந்த மாணவன்.. சஸ்பெண்ட் செய்த பள்ளி முதல்வர்!

தனியார் பள்ளி ஒன்றில் 2 ஆம் வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவன் பயின்று வருகிறான். அம்மாணவன் மதிய உணவுக்காக அசைவம் எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பள்ளியின் முதல்வர் அவனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அம்மாணவனின் தாய் நேரடியாக பள்ளிக்கு வந்துள்ளார். அங்கு பள்ளி முதல்வரை சந்தித்து நேரில் நடந்த சம்பவங்கள் பற்றியும், அதன் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கேட்டுள்ளார்.

Uttar Pradesh: உ.பி.,யில் அசைவம் கொண்டு வந்த மாணவன்.. சஸ்பெண்ட் செய்த பள்ளி முதல்வர்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 06 Sep 2024 08:58 AM

பள்ளி மாணவன் சஸ்பெண்ட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிக்கு அசைவ உணவு கொண்டு வந்த மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் உள்ள அம்ரோஹா என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் 2 ஆம் வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவன் பயின்று வருகிறான். அம்மாணவன் மதிய உணவுக்காக அசைவம் எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பள்ளியின் முதல்வர் அவனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அம்மாணவனின் தாய் நேரடியாக பள்ளிக்கு வந்துள்ளார். அங்கு பள்ளி முதல்வரை சந்தித்து நேரில் நடந்த சம்பவங்கள் பற்றியும், அதன் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கேட்டுள்ளார்.

Also Read: Actress Sowmya: மகள் என சொல்லி எல்லை மீறிய தமிழ் இயக்குநர்.. பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு

அப்போது மாணவனின் தாயார் பள்ளி முதல்வருடனான உரையாடலை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். அதில், அந்த பெண்ணிடம் பேசும் பள்ளி முதல்வர்,  “நம்முடைய கோயில்களை இடித்துவிட்டு அசைவத்தை பள்ளிக்கு கொண்டு வருபவர்கள் போன்ற ஒழுக்கங்களை கொண்ட மாணவர்களுக்கு கற்பிப்பதை நாங்கள் விரும்பவில்லை” என காட்டமாக தெரிவிக்கிறார். மேலும், “அந்தச் சிறுவன் அனைவருக்கும் அசைவம் உணவை கொடுப்பதாகவும், மற்றவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவது பற்றி பேசினான்” எனவும் பள்ளி முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் மாணவன் அசைவ உணவு எடுத்து வந்ததை அவரது தாயார் மறுத்த நிலையில்,  அந்த மாணவன் ஒப்புக்கொண்டதாக பள்ளி முதல்வர் தெரிவிக்கிறார். அதேசமயம் தனது மகன் இதுபோன்ற மதம் சார்ந்த விஷயங்களை கண்டிப்பாக இந்த வயதில் பேச முடியாது என அவனது தாயார் வாதாடுகிறார். பதிலுக்கு ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெற்றோரால் கற்பிக்கப்படும் அனைத்தையும் வீட்டில் கற்றுக் கொள்கிறது என பள்ளி முதல்வர் குற்றம் சாட்டுகிறார்.

Also Read: Mangolia vs Singapore: 5 பந்தில் முடிந்த கிரிக்கெட் போட்டி.. மங்கோலியா மோசமான சாதனை!

மேலும் சம்பந்தப்பட்ட மாணவனால் மற்ற மாணவர்களுக்கும் பிரச்சினை இருப்பதாக அவர்களின் பெற்றோரிடம் இருந்து புகார் வந்துள்ளது. அதனால்  அந்த மாணவன் பெயர் பள்ளியின் வருகை பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம்  தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி மிகப்பெரிய அளவில் பள்ளி முதல்வரின் செயல் கண்டனத்திற்கு உள்ளானது. இந்த விவகாரம் தொடர்பாக அம்ரோஹா காவல்துறை மற்றும் மாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் அமைப்பு ஆகியோர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News