ஆந்திராவை அதிரவைத்த சீரியல் கில்லர்கள்.. சயனைடு கலந்து 4 பேரை கொன்ற பெண்கள்.. பகீர் பின்னணி!
ஆந்திராவில் 4 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மூன்று வருடத்தில் 4 பேரை இந்த மூன்று பெண்கள் கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றவர்களிடம் நட்பாக பழகி அவர்களுக்கு சயனைடு கலந்து குளிர்பானம் கொடுத்து கொலை செய்கின்றனர்.
4 பேரை கொன்ற பெண்கள்: ஆந்திராவில் 4 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மூன்று வருடத்தில் 4 பேரை இந்த மூன்று பெண்கள் கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றவர்களிடம் நட்பாக பழகி அவர்களுக்கு சயனைடு கலந்து குளிர்பானம் கொடுத்து கொலை செய்கின்றனர். பின்னர், அவர்களிடம் இருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிகின்றனர். இந்த வேலையே கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் சயனைடு கொலைக்காரராக சொல்லப்படும் ஜோலி ஜோசப் கதையை நினைவுப்படுத்தியது. ஆந்திர மாநிலம் தெனாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மூன்று பெண்கள். இவர்கள் ரஜினி, வெங்கடேஸ்வரி மற்றும் ரமணம்மா என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் தான் தொடர் கொலைகளில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இவர்கள் முதலில் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேச்சுக் கொடுத்து நட்பாகி பழகிய பிறகு, குளிர்பானம் வங்கிக் கொடுப்பது போல அதில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்வதாக போலீசார் தெரிவித்தனர். சயனைடு கலந்த குளிர்பானத்தை குடித்த பிறகு, உயிரிழந்தவர்களின் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுபோன்றே இதுவரை மூன்று பெண்கள் உள்பட நான்கு பேரை இந்த பெண்கள் கொலை செய்திருக்கின்றனர்.
Also Read: திடீரென இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம்.. 8 பேர் பலியான சோகம்!
பகீர் பின்னணி:
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் கொலையை இவர்கள் செய்தனர். அடுத்தடுத்த கொலைகளை செய்துள்ளனர். கடைசியாக 2 பெண்களை சயனைடு குளிர்பானம் கொடுத்து கொலை செய்ய முயன்றபோது, அவவர்கள் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பெண்களை கைது செய்தனர்.
இந்த கொலைகளில் ஈடுபட்ட பெண்களில் ஒருவரான வெங்கடேஸ்வர் ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இவர் தெனாலி பகுதியில் தன்னார்வலராக வேலை செய்து வந்துள்ளார். பிறகு வெளிநாட்டிற்கு சென்று குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அவர், மீண்டும் ஆந்திராவிற்கு திரும்பி இங்கு சீரியல் கொலைகளை நடத்தி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட மூன்று பெண்களிடம் இருந்து சயனைடு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பெண்களுக்கு சயனைடு சப்ளை செய்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Also Read: விநாயகருக்கு ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்க கிரீடம்.. ஆனந்த் அம்பானியின் தனித்துவமான பரிசு..
ஏசி மெக்கானிக் வேலை செய்யும் தங்கள் நண்பர் தங்கள் நண்பர் ஒருவரிடமிருந்து அந்த பெண்கள் சயனைட்டைப் பெற்றனர். அந்த பெண் தங்கம் தயாரிக்கும் நபரிடம் இருந்த பெற்று அந்த பெண்களுக்கு கொடுத்திருக்கிறலார். கைது செய்யப்பட்ட பெண்கள் விசாரணையில் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆந்திராவில் நடந்த இந்த சம்பவம் கேரளாவில் சயனைடு கொலைக்காரராக சொல்லப்படும் ஜோலி ஜோசப் கதையை நினைவுப்படுத்தியது. கேரளாவைச் சேர்ந்த ஜோலி ஜோசப் என்கிற பெண், 14 ஆண்டுகளில் தனது கணவர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.