5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

J&K Terrorist Attack: காஷ்மீரில் மீண்டும் அட்டகாசம்.. தீவிரவாதிகள் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

மத்திய காஷ்மீரில் சோன்மார்க் அருகே உள்ள ககாங்கிர் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பாதிக்கப்பட்டவர்கள் அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தாக்குதல்கள் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

J&K Terrorist Attack: காஷ்மீரில் மீண்டும் அட்டகாசம்.. தீவிரவாதிகள் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 21 Oct 2024 06:30 AM

காஷ்மீர் தாக்குதல்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் உச்சக்கட்ட பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. அங்குள்ள கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் பகுதியில் தான் நேற்று (அக்டோபர் 20) மாலை பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு மருத்துவர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 6 பேர் என மொத்தம் 7 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. அதேசமயம் 5  பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சோனாமார்க் பகுதியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதைக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் ககனீரை சோனாமார்க்குடன் இணைக்கும் இசட் மோர் சுரங்கப்பாதைக்காக பணியாற்றி வந்த கட்டுமானக் குழுவில் இருந்த தொழிலாளர்கள் மீது இந்த கொடூர தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் விரைவாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உரிய விசாரணை நடத்தினர். மேலும் தாக்குதல் நிகழா வண்ணம் பாதுகாப்பை உறுதி செய்தனர்.

Also Read:SA-W vs NZ-W Final: தடுமாறிய தென்னாப்பிரிக்கா.. மகளிர் டி20 சாம்பியனான நியூசிலாந்து!

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பிரிவு 370 கடந்த 2019 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட பின் 10 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் தான் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவை வீழ்த்தி தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. காஷ்மீர் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சி கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்றுள்ளார். இப்படியான நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அக்டோபர் 18 ஆம் தேதி புலம்பெயர் தொழிலாளர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார். தெற்கு காஷ்மீரின் சோபியான் வண்டினா பகுதியில் உள்ள புதரில் உடலில் குண்டு காயங்களுடன் மர்மமான நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இறந்தவர் பீகார் பகல்பூரைச் சேர்ந்த அசோக் குமார் சவுகான் என அடையாளம் காணப்பட்டது.

இதனிடையே மத்திய காஷ்மீரில் சோன்மார்க் அருகே உள்ள ககாங்கிர் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பாதிக்கப்பட்டவர்கள் அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தாக்குதல்கள் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Also Read: Crime: ஆந்திராவில் கோர சம்பவம்.. திருமணம் செய்ய கேட்ட 16 வயது சிறுமி எரித்துக்கொலை!

அதேசமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பதிலளித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சோனாமார்க் பகுதியில் உள்ள ககாங்கிரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது கொடூரமான மற்றும் கோழைத்தனமான தாக்குதல் நடைபெற்றது மிகவும் வருத்தமான செய்தி. உயிரிழந்தவர்கள் காஷ்மீரின் ஒரு முக்கிய உள்கட்டமைப்பு திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்பாவி மக்கள் மீதான இந்தத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலத்த காயம் அடைந்தவர்கள் ஸ்ரீநகரில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதால் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

Also Read: Crime: 533 சவரன் கவரிங் நகைகள்.. சிக்கிய காரைக்குடி பேங்க் மேனேஜர்!

இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் தாக்குதல் பற்றி கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜம்மு காஷ்மீரின் ககாங்கிரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல் ஒரு வெறுக்கத்தக்க கோழைத்தனமான செயல். இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க மாட்டார்கள், மேலும் நமது பாதுகாப்புப் படையினரின் கடுமையான பதிலை எதிர்கொள்வார்கள். துக்கமான இந்த தருணத்தில், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Latest News