5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Jharkhand Train Accident: ஜார்க்கண்டில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து.. 2 பேர் உயிரிழப்பு!

Jharkhand Train Derailment: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மகாராஷ்டிரா மும்பை நோக்கி சென்ற ஹவுரா - சிஎஸ்எம்டி விரை ரயிலின் 3 பெட்டிகள் இன்று ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் அருகே பாரபம்பு எனும் கிராமத்தில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. மும்பை விரைவு ரயில் தடம் புரண்டதில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Jharkhand Train Accident: ஜார்க்கண்டில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து.. 2 பேர் உயிரிழப்பு!
ரயில் விபத்து
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Jul 2024 10:45 AM

ரயில் விபத்து: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மகாராஷ்டிரா மும்பை நோக்கி சென்ற ஹவுரா – சிஎஸ்எம்டி விரை ரயிலின் 18 பெட்டிகள் இன்று ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் அருகே பாரபம்பு எனும் கிராமத்தில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.  இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மும்பை விரைவு ரயில் தடம் புரண்டதில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்குள்ளான பயணிகள் ரயில் அருகே சரக்கு ரயிலும் தடம் புரண்டுள்ளதால் இரண்டு விபத்துகளும் ஒரே நேரத்தில் நடைபெற்றதா என தெளிவாகத் தெரியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். பயணிகள் ரயில் தடம் புரண்டற்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: வயநாடு நிலச்சரிவு.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்.. பிரதமர் மோடி அறிவிப்பு!

உதவி எண்கள் அறிவிப்பு:

மும்பை – ஹவுரா விரைவு ரயில் பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக டாடாநகர்: 06572290324, சக்ரதர்பூர்: 06587 238072, ரூர்கேலா: 06612501072, 06612500244, ஹவுரா: 9433357920, 03326382217 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த ரயில் விபத்தை அடுத்து சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த வழிதடத்தில் செல்லும் ஹவுரா-இஸ்பார்ட் விரைவு ரயில், காரக்பூர்-தன்பாத் விரைவு ரயில், ஹவுரா-பார்பில் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Also Read: காலையிலேயே அதிர்ச்சி.. வயநாடு பகுதிகளில் நிலச்சரிவு… 24 பேர் உயிரிழப்பு!

இந்த ரயில் விபத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “மற்றொரு பயங்கர ரயில் விபத்து. இன்று காலை ஜார்க்கண்டியில் பயணிகள் ரயில் தடம் புரண்டது. இதுதான் ஆட்சியா? ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்துகளால் மரணங்கள், காயங்கள் ஏற்படுகின்றன. இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்வோம்? விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்க இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

Latest News