Deviramma Hills : சாரை சாரையாக மலை ஏறிய பக்தர்கள்.. சறுக்கி விழுந்து காயமடைந்த பரிதாபம்!

Devotees Injured | தீபாவளி பண்டிகை அன்று கோயிலுக்கு செல்வதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில், கர்நாடகாவில் உள்ள ஒரு கோயிலில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலை மீது ஏறியதால், பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.

Deviramma Hills : சாரை சாரையாக மலை ஏறிய பக்தர்கள்.. சறுக்கி விழுந்து காயமடைந்த பரிதாபம்!

தேவிரம்மா மலை மீது ஏறிய பக்தர்கள்

Published: 

01 Nov 2024 14:54 PM

கரநாடகா மாநிலத்தில் உள்ள தேவிரம்மா மலை மீது சாமி தர்சனம் செய்ய ஒரே நேரத்தில்  ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏறிய நிலையில், பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். பக்தர்கள் சாரை, சாரையாக மலைமீது ஏறும் வீடியோ காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அங்கு என்ன நடந்தது ஏன் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறினர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி பண்டிகையை கொண்டாடினர். தீபாவளி பண்டிகையில் கொண்டாட்டங்கள் எவ்வளவு முக்கியமாக உள்ளதோ அதே அளவிற்கு கடவுளை வழிபடுவதும் முக்கியமாக உள்ளது. இதன் காரணமாக, மக்கள் கோயில்களில் வழிபாடு செய்தனர். இதனால் அனைத்து கோயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதையும் படிங்க : Sivakasi : தீபாவளி பட்டாசு விற்பனை.. ரூ.6,000 கோடிக்கு விற்பனை செய்து அசத்திய சிவகாசி ஆலைகள்!

ஒரே நேரத்தில் மலை ஏறிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்

தீபாவளி பண்டிகை அன்று கோயிலுக்கு செல்வதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில், கர்நாடகாவில் உள்ள ஒரு கோயிலில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலை மீது ஏறியதால், பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் சிக்கமாகளூரு என்ற பகுதியில் தேவிரம்மா என்ற மலை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ள இந்த மலையில் உள்ள கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இதையும் படிங்க : IPL 2025: எம்.எஸ்.தோனி ஆதரவு.. சென்னை அணியில் ரிஷப் பண்ட்..? ரெய்னா கொடுத்த அப்டேட்!

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி

இந்த கோயிலுக்கு செல்ல பகதர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தான் அனுமதி வழங்கப்படும். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று மட்டும்தான் இந்த தேவிரம்மா மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்த நிலையில், நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் கோயிலுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சாரை சாரையாக மலை மீது ஏரியதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 25 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. வானிலை சொல்லும் தகவல் என்ன?

இவ்வாறு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மலை மீது ஏறிய நிலையில், எதிர்பாராத விதமாக மழை பெய்ததால் பல பக்தர்கள் வழுக்கி விழுந்துள்ளனர். இதானால் ஏராளமான பக்தர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இது குறித்து இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் தேவிரம்மா மலை மீது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏறும் காட்சி இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமன்றி மழையில் சிக்கி மலை ஏற முடியாமல் தவித்த பக்தர்களை மீட்பு படையினர் கயிறு கொண்டு மீட்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான மக்கள் மலை மீது ஏறியதல் பக்தர்கள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?