Andhra Pradesh Flood: வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா, தெலங்கானா.. 18 பேர் உயிரிழப்பு.. தவிக்கும் மக்கள்!
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் அருகே நேற்று அதிகாலை கரையை கடந்தது. இதையொட்டி பெய்த தொடர் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலத்தில் பெய்த கனமழையால் 9 பர் உயிரிழந்தனர். ஆந்தராவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாநிலத்தின் சில பகுதியில் 27 செ.மீ வரை மழை பதிவானது.
வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா, தெலங்கானா: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் அருகே நேற்று அதிகாலை கரையை கடந்தது. இதையொட்டி பெய்த தொடர் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலத்தில் பெய்த கனமழையால் 9 பர் உயிரிழந்தனர். ஆந்தராவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாநிலத்தின் சில பகுதியில் 27 செ.மீ வரை மழை பதிவானது. மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆந்திராவின் விஜயவாடா நகரமே தத்தளித்து வருகிறது. அங்கிருக்கும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளத்திலேயே நடந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனறர். இந்த திடீர் வெள்ளத்தால் சாலைகள், ரயில் நிலையங்கள் என பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
Also Read: குழந்தையை கொன்ற தாய்.. பிறந்த 6 நாட்களில் கொடூரம்.. அதிரவைத்த காரணம்!
குறிப்பாக கிருஷ்ணா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்பட்ட 10 லட்சம் கனஅடி நீர் புடமேரு நீரோடையில் பெருக்கெடுத்து ஓடுவதால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
போக்குவரத்து சேவை பாதிப்பு:
#WATCH | Andhra Pradesh: Severe waterlogging witnessed in various parts of Vijayawada leading to a flood-like situation, due to heavy rainfall. pic.twitter.com/dlC0iC6iam
— ANI (@ANI) September 2, 2024
என்டிஆர் மாவட்டத்தில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் 17 தேசிய, மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ரப்பர் மீட்பு படகில் சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் பார்வையிட்டார்.
அதோடு, பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் பேசி, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு உறுதியளித்தார். ஆந்திராவைப் போன்று தெலங்கானாவிலும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
Also Read: வேற லெவல்… ரெடியான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. எந்த ரூட் தெரியுமா?
கம்மம் மாவட்டத்தில் 110 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை பாதிப்புகள் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி அவசர ஆலோசனை மேற்கொண்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடரப்ன விபத்துகளின்ல சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.