பதற்றம்.. பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச் சூடு.. சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?

Sukhbir Singh Badal: பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரும், சிரோமணி அகாலி தள தலைவருமான சுக்பீர் சிங் பாதல் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு வெளியே நடந்துள்ளது.

பதற்றம்.. பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச் சூடு.. சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?

சுக்பீர் சிங் பாதல் (Picture credit : PTI)

Updated On: 

04 Dec 2024 10:57 AM

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரும், சிரோமணி அகாலி தள தலைவருமான சுக்பீர் சிங் பாதல் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு வெளியே நடந்துள்ளது. அமிர்தசரஸ் பொற்கோவில் வாயிலின் வெளியே நாற்காலியில் சிரோமணி அகாலி தள் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அமர்ந்துக் கொண்டிருந்தார். அமிர்தசரஸ் பொற்கோயில் வெளியே சீக்கிய மதம் தமக்கு அளித்த தண்டனையை நிறைவேற்றும் வகையில் ஈட்டியுடன் காவல் பணியில் சுக்பீர் சிங் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்.

சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு

இந்த சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் நடந்துள்ளது. இதனால் உடனே அங்கிருந்தவர்கள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் நடந்த போது ஏராளமானோர் அங்கு உடனிருந்தனர்.  இது சம்பந்தமான வீடியோ வெளியாகி உள்ளது. அதில், பொற்கோயிவில் வாசலில் ஈட்டியை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கே இருந்த ஒருவர் தனது சட்டையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுக்பீர் சிங் பாதலை சுட முயன்றார். அப்போது உடன் இருந்தவர்கள் இதை பார்த்ததும் துப்பாக்கியை தட்டிவிட்டனர். இதனால் துப்பாக்கியில் இருந்த குண்டு பொற்கோயிலின் சுவரில் பாய்ந்தது. உடனடியாக சுக்பீர் சிங் பாதலை சுட்ட நபரை மடக்கி பிடித்தனர்.

VIDEO | Punjab: A man opened fire at Shiromani Akali Dal leader Sukhbir Singh Badal at the entrance of Golden Temple, Amritsar. The person was overpowered by people present on the spot. More details are awaited.#PunjabNews #SukhbirSinghBadal

(Full video available on PTI… pic.twitter.com/LC55kCV864

— Press Trust of India (@PTI_News) December 4, 2024

Also Read : தெலங்கானாவில் திடீர் நிலநிடுக்கம்.. பதறிய மக்கள்.. நடந்தது என்ன?

சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தியவர் யார்?

இதுப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பெயர் நரேன் சிங்.  இவர் அமிர்தசரஸில் இருந்து 75 கிமீ தொலைவில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மேலும் இவர், காலிஸ்தான் ஆதரவாளராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. படுகொலை வழக்குகள் தொடர்பாக சுக்பீர் பாதல் மீது அவர் கோபமாக இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு வந்து செல்வதாக  கூறப்படுகிறது. இவர்  பஞ்சாபிற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நரேண் சிங் சௌரா, 1984-ல் பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்தபோது ​அவர் தேசத்துரோகம் பற்றிய புத்தகத்தை எழுதியதாக கூறப்படுகிறது.

இவர் கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அமிர்தசரஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 2018ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

Also Read : வெள்ள பாதிப்பு! குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

இதுகுறித்து அமிர்தசரஸ் போலீஸ் கமிஷனர் குர்பிரீத் சிங் புல்லர் கூறுகையில், ”அமிர்தசரஸ் பொற்கோயிலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுக்பீர் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார். பஞ்சாப் மாநிலத்தில் பிரதான அரசியல் கட்சியாக சிரோமணி அகாலிதளம் உள்ளது. சிரோமணி அகாலிதளம் ஆட்சியில் துணை முதல்வராக  சுக்பீர் பாதல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?