“ராகுல் காந்தி நாக்கை வெட்டுங்க.. ரூ.11 லட்சம் தரேன்” பகீர் கிளப்பிய எம்.எல்.ஏ! - Tamil News | shiv sena mla Sanjay Gaikwad stris controversy says will give rs 11 lakh to anyone chopping Rahul Gandhi tongue | TV9 Tamil

“ராகுல் காந்தி நாக்கை வெட்டுங்க.. ரூ.11 லட்சம் தரேன்” பகீர் கிளப்பிய எம்.எல்.ஏ!

Published: 

16 Sep 2024 20:06 PM

ராகுல் காந்தியின் நாக்கை அறுபவருக்கு ரூ.11 லட்சம் பரிசாக வழங்குவதாக சிவசேனா எம்.எல்.ஏ பேசியது  பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆளும் சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ சஞ்செய் கெய்க்வாட் இந்த சர்ச்சை கருத்தை கூறியிருக்கிறார். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அமெரிக்க பயணத்தை சுட்டிக் காட்டி இந்த கருத்தை கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

ராகுல் காந்தி நாக்கை வெட்டுங்க.. ரூ.11 லட்சம் தரேன் பகீர் கிளப்பிய எம்.எல்.ஏ!

ராகுல் காந்தி (Picture Credit: PTI)

Follow Us On

ராகுல் காந்தியின் நாக்கை அறுபவருக்கு ரூ.11 லட்சம் பரிசாக வழங்குவதாக சிவசேனா எம்.எல்.ஏ பேசியது  பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆளும் சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ சஞ்செய் கெய்க்வாட் இந்த சர்ச்சை கருத்தை கூறியிருக்கிறார். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அமெரிக்க பயணத்தை சுட்டிக் காட்டி இந்த கருத்தை கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எம்.எல்.ஏ சஞ்ச்செய் கெய்க்வாட், “ராகுல் காந்தி அமெரிக்காவில் இருந்தபோது, ​​இந்தியாவில் இடஒதுக்கீடு முறையை முடிக்க விரும்புவதாக கூறினார். நாட்டில் இடஒதுக்கீடு கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் , காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் இடஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். லோக்சபா தேர்தலில் வாக்குகளை பெற பொய்யான செய்தியை பரப்பினார். தற்போது இந்தியாவில் இடஒதுக்கீடு முறையை முடிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார்.  இது காங்கிரஸின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

தனது சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது, ​​இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி ராகுல் காந்தி பேசினார். இடஒதுக்கீட்டை இயல்பாகவே எதிர்க்கும் மனநிலையை இது காட்டுகிறது. இப்படி பேசிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவக்கு 11 லட்சம் ரூபாய் சன்மானம் அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

இவரது கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அவரின் கருத்துகளை ஆதரிக்கவில்லை என்று கூட்டணி கட்சியான பாஜக தெரிவித்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே பேசுகையில், “கொய்க்வாட்டின் கருத்துகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால், இட ஒதுக்கீடு வழங்குவது என்பது முட்டாள்களை ஆதரிப்பது என்று ராஜீவ் காந்தி கூறியிருந்தார். இப்போது ராகுல் காந்தி இட ஒதுக்கீட்டை முடிக்க விரும்புகிறார். பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

நேரு, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் இடஒதுக்கீடு கருத்துகளை அவர்களுக்கு கூறுவோம்” என்றார். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சிவசேனா கூட்டணியில் பாஜக, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த நிலையில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ சர்ச்சை கருத்தை பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராகுல் காந்தி அமெரிக்க பயணம்:

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக கடந்த 8ஆம் தேதி அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்ய காங்கிரஸ் கட்சி யோசிக்கும் என்று கூறினார். ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடிய அவர், “இந்தியா அனைத்து தரப்பினருக்கும் நியாயமான இடமாக மாறும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி காங்கிரஸ் கட்சி யோசிக்கும். இப்போது இந்தியா நியாயமான இடமாக இல்லை.

நிதி எண்களைப் பார்க்கும்போது, ​​பழங்குடியினருக்கு 100 ரூபாயில் 10 பைசா கிடைக்கும். தலித்துகள் 100 ரூபாயில் 5 ரூபாய் பெறுகிறார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) அதே எண்ணிக்கையைப் பெறுகிறார்கள். இது சமத்துவமற்ற நிலைக்கு ஒரு சாட்சி. இந்தியாவில் 90 சதவீதம் பேர் தொழில்துறையில் பெரிதாக பங்களிக்க முடியாமல் இருப்பதுதான் பிரச்சனை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வணிகத் தலைவரின் பட்டியலைப் பார்க்கவும். இந்தியாவில் டாப் 200 தொழில் ஜாம்பவான்கள் பட்டியலை சொல்லலாம்.

அதில் எனக்கு ஒரு பட்டியலின, பழங்குடியின பெயர்களை காட்டுங்கள். எனக்கு தெரிந்து ஒரே ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அந்த பட்டியலில் இருக்கிறார். ஆனால், இந்தியாவில் 50 சதவீதம் மக்கள் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். இப்படியிருக்க நான் சரியாக பிரச்னைக்கு கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை. எனவே, இந்தியா நியாயமான இடமாக மாறும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் யோசிக்கும்” என்று கூறியிருந்தார்.

வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
Exit mobile version