Weather Alert: கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் மழை பெய்யுமா? - Tamil News | | TV9 Tamil

Weather Alert: கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் மழை பெய்யுமா?

Southwest Monsoon: தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும். இந்த பருவமழைதான் நாடு முழுவதும் மழை கொடுக்கும் நீராதாரமாக உள்ளது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஜூன் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Weather Alert: கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் மழை பெய்யுமா?

மழை (மாதிரிப்படம்)

Updated On: 

30 May 2024 12:22 PM

தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட இரண்டு நாட்கள் முன்னதாக, இன்று  கேரளாவில் தொடங்கியது. அதே நேரத்தில் ஜூன் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக முன்னேறி வட மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் வரை மழை இருக்கும். இதனால், தென்மேற்கு பருவமழைக்கு மக்கள் எப்போதுமே எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாக தொடங்குகிறது. அதாவது இன்று தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை இருக்கா?

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 31ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 1,2ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஜூன் 3,4ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

இன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மே 31ஆம் தேதி குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

மே 30ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூன் 1 முதல் 3ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?