5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Shocking News : பெண்களின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட செல்போன்.. கையும் களவுமாக சிக்கிய ஊழியர்!

Mobile Phone | முன்பெல்லாம் பல நாட்கள் காத்திருந்து செய்த வேலைகளை தற்போது, ஸ்மார்ட்போன்களின் வருகையால் வீட்டில் இருந்தே எளிதாக செய்து முடித்துவிட முடியும். இந்த ஸ்மார்ட்போன்கள் எந்த அளவுக்கு பயனுள்ளவையோ அந்த அளவிற்கு ஆபத்தானவையும் கூட. காரணம் ஸ்மார்ட்போன்கள் மூலம் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதுதான்.

Shocking News : பெண்களின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட செல்போன்.. கையும் களவுமாக சிக்கிய ஊழியர்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 12 Aug 2024 11:24 AM

அதிர்ச்சி சம்பவம் : தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை ஸ்மார்ட்போன்கள் தான். ஸ்மார்ட்போன்கள் மூலம் நம்மால் பல வேலைகளை சுலபமாக செய்து முடித்துவிட முடியும். முன்பெல்லாம் பல நாட்கள் காத்திருந்து செய்த வேலைகளை தற்போது, ஸ்மார்ட்போன்களின் வருகையால் வீட்டில் இருந்தே எளிதாக செய்து முடித்துவிட முடியும். இந்த ஸ்மார்ட்போன்கள் எந்த அளவுக்கு பயனுள்ளவையோ அந்த அளவிற்கு ஆபத்தானவையும் கூட. காரணம் ஸ்மார்ட்போன்கள் மூலம் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதுதான். தற்போது அத்தகைய ஒரு சம்பவம் தான் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது.

இதையும் படிங்க : Bihar Stampede: கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.. ஹத்ராஸை தொடர்ந்து பீகாரில் நடந்த கொடூரம்..

பெண்களின் கழிவறையில் வீடியோ எடுப்பதற்காக மறைத்து வைக்கப்பட்ட செல்போன்

பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்தில் பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில், செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் தான் அது. பெங்களூரில் உள்ள ஒரு பிரபல உணவகத்திற்கு, இளம் பெண் ஒருவர் தனது நண்பருடன் சென்றுள்ளார். அப்போது கழிவறையை பயன்படுத்திய அந்த பெண், கழிவறையின் குப்பை தொட்டியில் கிடந்த செல்போனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த இளம் பெண், உணவக நிர்வாகத்திடம் புகார் அளிக்கவே, அந்த ஸ்மார்ட்போன் அங்கு பணிபுரியும் மனோஜ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. மனோஜ் தனது ஸ்மார்ட்போனை ஃபிலைட் மோடில் போட்டுவிட்டு, டிசு பேப்பாரால் சுற்றி குப்பை தொட்டியில் மறைத்து வைத்துள்ளார். அந்த ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட 1 மணி நேரம் 40 நிமிடங்கள் வீடியோவை பதிவு செய்துள்ளது. அதிஷ்டவசமாக அதுவரை அந்த கழிவறையை யாரும் பயன்படுத்தாததால், அந்த வீடியோவில் எதுவும் இடம்பெறவில்லை.

இதையும் படிங்க : ODI Century: ஒரு நாள் போட்டியில் பதிவாகாத சதம்.. 38 ஆண்டுகாலத்தில் முதல்முறை.. இந்திய அணி மோசமான சாதனை!

மொபைல் போனை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளும் போலீஸ்

இது குறித்து தெரிவித்த உணவக ஊழியர் மனோஜ், இதுதான் தான் முதல் முறையாக இவ்வாறு செய்தது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரின் மொபைல் போனில் ஏதேனும் வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சோதிக்க டேட்டா ரிட்ரைவல் குழுவிடம் ஸ்மார்ட்போன் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து உணவக நிர்வாகம் விளக்கம்

இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள உணவக நிர்வாகம், இந்த நிகழ்வு குறித்து நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஊழியரை நாங்கள் பணியிலிருந்து எடுத்துவிட்டோம். எங்களுக்கு எப்பொழுதும் வாடிக்கையாளரின் பாதுகாப்பு முக்கியம் என்று தெரிவித்துள்ளது.

Latest News