5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Menstrual Leave: மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறையா? உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாதவிடாய் விடுப்பு என்பது மத்திய அரசின் கொள்கை விவகாரம், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் உள்ள மாணவிகளுக்கும், வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

Menstrual Leave: மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறையா? உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
உச்ச நீதிமன்றம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 Jul 2024 14:05 PM

உச்ச நீதிமன்றம்: மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாதவிடாய் விடுப்பு என்பது மத்திய அரசின் கொள்கை விவகாரம், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் உள்ள மாணவிகளுக்கும், வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசுசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா, பார்திவாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கில் கொள்கைப் பரிமாணம் இருக்கிறது. இது மத்திய அரசின் கொள்கை முடிவு சார்ந்தது.

இதில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கலாம். இந்த விஷயத்தை நன்றாக ஆராய்ந்து, குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் முடிவெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக மாநில அரசும் நடவடிக்கை எடுப்பதற்கு எந்த தடையும் இல்லை.

Also Read: வடமாநிலங்களில் தொடரும் கனமழை.. உத்தர பிரதேசம், பீகாரில் 22 பேர் உயிரிழப்பு!

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறையா?

மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது முதலாளிகள் பெண்களுக்கு வேலை கொடுக்காமல் போகலாம். மாதவிடாய் விடுப்புகளை கட்டாயப்படுத்துவது பெண்களை பணியிலிருந்து ஒதுக்கி வைக்க வழிவகுக்கும். நாங்கள் அதை விரும்பவில்லை. பெண்களை பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய கூட வாய்ப்புள்ளது. இது உண்மையில் அரசாங்கத்தின் கொள்கை சார்ந்த விஷயம். நீதிமன்றங்கள் கவனிக்க வேண்டியதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்தது. பெண் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்புக்கான விதிகளை உருவாக்க அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடக் கோரிய மனுவில், இந்த விவகாரம் கொள்கை சார்ந்தது என்று நீதிமன்றம் கூறியிருந்தது. தற்போது, ​​பீகார் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. பீகாரில் பெண் ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கேரளாவில் மாதவிடாய் விடுப்பு மூன்று நாட்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 3 நாள் வெளிநாட்டு பயணம்.. ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை.. முழு விவரம்..

Latest News