Tirupati Laddu Row: ” அரசியலில் இருந்து கடவுளை ஒதுக்கி வைக்க வேண்டும்” – திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து..
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா, லட்டு ருசி இல்லை என்று மக்கள் புகார் அளித்ததாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது மக்களுக்குத் தெரியாது என்றும் இது வெறும் அறிக்கை என்றும் நீதிமன்றம் கூறியது. "அசுத்தமான நெய் பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை" என்று நீதிமன்றம் கூறியது.
திருமலை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரிக்கக் கோரிய மனுக்களை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் பன்றி கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் உறுதியானதை தொடர்ந்து இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. பல தரப்பு கருத்துக்கள் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக பக்தர்கள் பெரும் அதிர்ச்சியிக்கு ஆளானார்கள். இந்த பிரச்சனை தொடர்ந்து திருப்பதியில் தோஷத்தை போக்க ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து இனி லட்டு தயாரிக்க நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. மேலும், திண்டுக்கலை சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனம் திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்து, 4 டேங்கர் லாரிகளில் விநியோகம் செய்ததாக திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
#BREAKING #Tirupati Laddu Row | ‘Lab Report Doesn’t Prima Facie Show Impure Ghee Was Used:’ Supreme Court Slams AP CM For Public Comments |@DebbyJain #SupremeCourt #TirupatiLaddu #AndhraPradesh https://t.co/hSFqyhrOik
— Live Law (@LiveLawIndia) September 30, 2024
லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் விலகுகள் கொழுப்பு இருப்பது தொடர்பாக திருப்பதியில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பலரும் மனுக்களை வழங்கி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் இன்று பிற்பகல் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைப்பெற்றது. அப்போது பிரசாதம் தயாரிப்பதற்கு அசுத்தமான நெய் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் என்ன என்று ஆந்திரா அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா, லட்டு ருசி இல்லை என்று மக்கள் புகார் அளித்ததாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது மக்களுக்குத் தெரியாது என்றும் இது வெறும் அறிக்கை என்றும் நீதிமன்றம் கூறியது. “அசுத்தமான நெய் பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை” என்று நீதிமன்றம் கூறியது.
ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம் பதில் அளித்த நீதிபதி பி.ஆர்.கவாய், “நீங்கள் அரசியல் சாசனப் பதவியை வகிக்கும் போது, கடவுளை அரசியலில் இருந்து விலக்கி வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் ரோஹத்கியிடம் பி.ஆர்.கவை மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு தனது அரசால் உத்தரவிடப்பட்ட விசாரணை அறிக்கைக்காகக் காத்திருக்காமல் இந்த விஷயத்தை ஏன் பகிரங்கப்படுத்தினார் என்பதையும் கேட்டறிந்தனர் .
ஆந்திரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டுமா எனப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என குறிப்பிட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி விசாரணையின் போது, விசாரணைக்கு உத்தரவிட்டதாக சொல்கிறீர்கள். இது பயன்படுத்தப்பட்ட நெய் அல்ல என்பது அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் உறுதியாக தெரியாவிட்டால், அதை எப்படி பொதுவில் சென்றீர்கள்? என்று நீதிபதி விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார்.
Also Read: பிரதமர் பாராட்டிய மதுரை பெண்.. மூலிகைத்தோட்டம் மூலம் பிரபலம்.. யார் இந்த சுபஸ்ரீ?
மேலும், “எஸ்ஐடி மூலம் விசாரணைக்கு உத்தரவிட்டீர்கள். அத்தகைய விசாரணையின் முடிவு வரும் வரை, பத்திரிகைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?… கடவுளை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று நீதிபதி கவாய் கூறினார்.
“விசாரணை நடைமுறையில் இருக்கும் போது, ஒரு உயர் அரசியலமைப்புச் செயலாளரின் தரப்பில் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய ஒரு அறிக்கையைப் பகிரங்கமாகச் செல்வது பொருத்தமானதல்ல என்று நாங்கள் முதன்மையாகக் கருதுகிறோம்” என்று பெஞ்ச் கூறியது.
அரசு நியமித்துள்ள எஸ்ஐடி தொடர வேண்டுமா அல்லது சுதந்திரமான ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.