5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நேற்று ஜாமின், இன்று மினிஸ்டர்.. செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

Senthil Balaji case: ஒரு நாள் ஜாமின், மறுநாள் அமைச்சரவையில் இடம். இது எப்படி சாத்தியம் என செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

நேற்று ஜாமின், இன்று மினிஸ்டர்.. செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி
அமைச்சர் செந்தில் பாலாஜி
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 02 Dec 2024 14:44 PM

போக்குவரத்து பணி நியமன ஊழல் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள பணமோசடி வழக்கில் ஜாமீன் கிடைத்த உடனேயே, தமிழக அமைச்சரவையில் எப்படி விரைவாக மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்தது என உச்ச நீதிமன்றம் இன்று (டிச.2, 2024) கேள்வியெழுப்பி உள்ளது.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நிலுவையில் இருக்கும் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஏ.எஸ் ஓகா மற்றும் ஏ.ஜி மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், நீதிபதிகள் இதனை சுட்டிக் காட்டினர். அப்போது, “இந்த நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குகிறது. மறுநாளே நீங்க அமைச்சரா? இதனால், நீங்கள் சாட்சிகள் மீது அழுத்தம் கொடுப்பீர்கள் என்ற எண்ணத்தில் எவரும் கட்டுப்படுவார்கள். இங்கே என்ன நடக்கிறது?” என்றார்கள்.

எனினும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீண்டும் மாநில கேபினட் அமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டதை கருத்தில் கொண்டு. சாட்சிகள் சந்திக்கும் அழுத்தம் தொடர்பாகவும் கவலை தெரிவித்தது.

இதையும் படிங்க : ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரம் மீதான விசாரைணக்கு தடை.. டெல்லி உயர் நீதிமன்றம்

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 14, 2023 அன்று பணமோசடி வழக்கில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் பேருந்து நடத்துனர்கள் நியமனம், ஓட்டுநர்கள், இளநிலைப் பொறியாளர்கள் நியமனம் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி அவர் மீதான வழக்கு தொடரப்பட்டது.
2011 முதல் 2015 வரை அதிமுக அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் தி.மு.க.வால் அளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மசூதி ஆய்வை உடனே நிறுத்துங்க.. அமித் ஷாவிடம் வலியுறுத்திய திருமாவளவன்!

Latest News