5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

போதை பயணிகளால் நடுவானில் அவதி.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை!

Supreme court Judges: இருவரும் தனித்தனியாக இருக்கையில் உட்கார்ந்து 3 மணி நேர விமான நேரத்தை தங்கள் ஐபேட்களில் வழக்குகளைப் பற்றி படிக்க முடிவு செய்தோம். ஏறும் நேரத்தில் முதலில் அது மற்றொரு விமானம் போல் தோன்றியது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. நாங்கள் இருவரும் கேலரி பகுதி மற்றும் கழிவறைக்கு அருகில் அமர்ந்திருந்தோம்.

போதை பயணிகளால் நடுவானில் அவதி.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 27 Nov 2024 20:39 PM

விமானப் பயணம்:  கோயம்புத்தூரில் இருந்து டெல்லி சென்ற இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள், நடுவானில் போதையில் இருந்த பயணிகளால் தாங்கள் சந்தித்த சம்பவங்களை வேதனையுடன் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதியன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்து இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளான சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகிய இருவரும் இரவு விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மற்றொரு நீதிபதியின் மகனின் திருமணத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.அது ஞாயிற்றுக்கிழமை இரவு என்பதால் பெரும்பாலான இருக்கைகள் நிரம்பியிருந்தது.

Also Read: Dhanush – Aishwarya: திருமண வாழ்க்கை ஓவர்.. தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!

எதிர்கொண்ட சோதனை

மேலும் மறுநாள் காலை திங்கட்கிழமை என்பதால் இரண்டு நீதிபதிகளும் தாங்கள் விசாரிக்க வேண்டிய வழக்குகளின் பட்டியலை பார்வையிட்டோம். இருவரும் தனித்தனியாக இருக்கையில் உட்கார்ந்து 3 மணி நேர விமான நேரத்தை தங்கள் ஐபேட்களில் வழக்குகளைப் பற்றி படிக்க முடிவு செய்தோம். ஏறும் நேரத்தில் முதலில் அது மற்றொரு விமானம் போல் தோன்றியது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. நாங்கள் இருவரும் கேலரி பகுதி மற்றும் கழிவறைக்கு அருகில் அமர்ந்திருந்தோம். விமானம் புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு சில பயணிகள், பலமுறை தட்டியும் ஒருவர் கழிவறைக் கதவைத் திறக்கவில்லை என்று அங்கிருந்தவர்கள் கூறினார். சுமார் அரை மணி நேரம் கழிவறையை ஒரு பயணி ஆக்கிரமித்திருந்தவரைப் பற்றி சில பயணிகள் புகார் செய்யத் தொடங்கினர்.

கதவை திறக்கவே பயந்த ஊழியர்கள்

அதேநேரத்தில், மற்றொரு ஆண் பயணி கேலரி பகுதியை நோக்கி நடந்து சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஏர் சிக்னஸ் பேக் என்றும் அழைக்கப்படும் வாந்தி எடுக்கும் பையில் குத்த ஆரம்பித்தார். விமான நிறுவனத்தின் குழுவினர் பலமுறை கழிவறைக் கதவைத் தட்டியும் எதிர்ப்பக்கத்தில் இருந்து எந்தவித பதில் வரவில்லை.

அந்த கதவின் மாஸ்டர் சாவியை பணியாளர்கள்கள் வைத்திருந்தாலும்,அனைத்து பெண் பணியாளர்களும் ஆண் பயணியின் நிலை தெரியாததால் அதை பயன்படுத்த தயங்கினார்கள். பின்னர், அவர்கள் மற்றொரு ஆண் விமானத்தை கதவைத் திறக்குமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது உள்ளே இருந்த பயணி குடிபோதையில் கழிப்பறையில் தூங்குவதைக் கண்டோம்.

அந்த பயணி போதையில் கழிவறையில் இருந்து வெளியே வந்து இருக்கைக்கு அழைத்து வரப்பட்டார். இதற்கிடையில் கேலரி அருகில் குத்திக் கொண்டிருந்த நபரும் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த நாங்கள் இதுபோன்ற பயணிகளால் நடுவானில் எதிர்கொண்ட சூழ்நிலையையும், அவற்றைச் சமாளிப்பதற்கான சரியான வழிகாட்டுதல்களின் அவசியத்தையும் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: MK Stalin: விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த முடியாது.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

வழக்கை விசாரித்ததில் அனுபவம் 

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தபோது, ​​குடிபோதையில் சக பயணி ஒருவரால் சிறுநீர் கழித்ததால் 73 வயது பெண் பயணி ஒருவர் பாதிக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அந்த பெண்மணி தாக்கல் செய்த இதுபோன்ற பயணங்களின்போது அனுமதிக்க முடியாத நடத்தை பற்றிய மனுவை நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் பி.ஆர்.கவை ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தான் எதிர்கொண்ட நிகழ்வை கே.வி.விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.

இப்படி ஒரு மனுவை விசாரித்த நீதிபதிக்கு, இதுபோன்ற செயல்கள் மற்ற பயணிகளுக்கு எவ்வாறு சிரமத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அனுபவித்தது தற்செயலாக நடந்த நிகழ்வாக அமைந்து விட்டது. நீதிபதி விஸ்வநாதன் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விஸ்வநாதன் அடங்கிய அமர்வு இந்த வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கத்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி உலகளாவிய நடைமுறைகளுக்கு ஏற்ப விமானங்களில் இதுபோன்ற கட்டுபாடற்ற செயல்களை சரி செய்ய வழிகாட்டுதல்களை ஆய்வு செய்து மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Latest News