Supreme Court: நவராத்திரி கொண்டாட்டம்.. உச்சநீதிமன்றத்தில் அசைவம், பூண்டு உணவுக்கு தடை! - Tamil News | Supreme Court lawyers opposed the restriction of canteen menu during Navratri 2024 | TV9 Tamil

Supreme Court: நவராத்திரி கொண்டாட்டம்.. உச்சநீதிமன்றத்தில் அசைவம், பூண்டு உணவுக்கு தடை!

Published: 

03 Oct 2024 21:54 PM

இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை மிகவும் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடால் வழக்கறிஞர்கள் தாங்கள் சார்ந்த பதிவு சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் கடந்த காலங்களில் நவராத்திரி கடைபிடிக்கும் வழக்கறிஞர்கள் மற்றவர்களுக்கு என்ற தடையும் விதிக்காமல் உணவை வீட்டில் இருந்து கொண்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Supreme Court: நவராத்திரி கொண்டாட்டம்.. உச்சநீதிமன்றத்தில் அசைவம், பூண்டு உணவுக்கு தடை!

கோப்பு புகைப்படம்

Follow Us On

உச்சநீதிமன்றம்: இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி பண்டிகை நாடு முழுதும் தொடங்கியுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நவராத்திரியை முன்னிட்டு உச்சநீதிமன்றத்தில் உள்ள உணவகத்தில் அசைவ மற்றும் பூண்டு, வெங்காயம் கலந்த உணவுகளை வழங்க வாய்மொழியாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் நாடு முழுவதும் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை இன்று முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகை என்றாலே வீடுகளில் மற்றும் கோயில்களில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.

இதையும் படிங்க: Diwali Bonus : தமிழக அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ்?.. வெளியான முக்கிய தகவல்!

அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை மிகவும் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடால் வழக்கறிஞர்கள் தாங்கள் சார்ந்த பதிவு சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் கடந்த காலங்களில் நவராத்திரி கடைபிடிக்கும் வழக்கறிஞர்கள் மற்றவர்களுக்கு என்ற தடையும் விதிக்காமல் உணவை வீட்டில் இருந்து கொண்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது உச்சநீதிமன்றத்தில் நடைமுறையாக இருந்து வரும் நிலையில் இந்தாண்டு திடீரென கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் உச்சநீதிமன்ற உணவகத்தில் நவராத்திரி உணவு வழங்கதை நாங்கள் எதிர்க்கவில்லை என்றாலும் இந்த உணவு மட்டுமே வழங்கப்படும் என்பது மற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என வழக்கறிஞர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் உச்சநீதிமன்ற உணவகம் என்பது இங்குள்ள வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உணவளிக்கும் இடமாகும். அனைவரும் அதைச் சார்ந்திருக்கும் நிலையில் ஒரு சிலரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக அசைவம் மற்றும் வெங்காயம் பூண்டுடன் உணவை வழங்காமல் இருப்பது மரபுகளுக்கு எதிரான பண்பாகும். இது மற்றவர்களின் நம்பிக்கை மதிப்பு தருவதாக இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Uttar Pradesh : ஐபோனுக்காக நடந்த கொலை.. டெலிவரி பாய்க்கு நடந்த கொடுமை.. குற்றம் நடந்தது எப்படி?

எனவே நவராத்திரி உணவுகளுடன் வழக்கமாக உணவகத்தின் வழங்கப்படும் உணவுகளையும் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுபோன்று உணவு கட்டுப்பாடு விதிக்கப்படுவது எதிர்காலத்தில் ஒரு தவறான முன்னோர் முன்னுதாரணமாக அமைந்துவிடும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தின் விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடு மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் இதில் மாற்றம் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உச்சநீதிமன்றம் என்பது அனைவருக்கும் பொதுவான இடமாகும். இங்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களைச் சார்ந்த மக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். அன்புள்ள உணவகத்தில் தினசரி ஆயிரக்கணக்கானோர் உணவருந்தி செல்கின்றனர். அப்படி இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட நபர்களுக்காக இப்படிப்பட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் நீதிபதிகள் என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கப் போகிறார்கள் என்று கேள்வி எழுந்தது.

நவராத்திரி பண்டிகை

நவராத்திரி என்பது அம்பிகைக்குரிய முக்கிய விசேஷ தினங்களில் ஒன்றாகும். புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி நவமி வரையுள்ள ஒன்பது நாட்கள் தான் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. மலைமகள் கலைமகள் அலைமகள் ஆகிய மூன்று அம்பிகையும் ஒன்று சேர்ந்து மகிஷாசுரனை வதம் செய்ய விரதம் இருந்த தவக்காலம் தான் நவராத்திரி விழாவாகும். அவள் மகிஷாசுரனை வதம் செய்து அந்த ஆயுதத்துக்கு ஓய்வு கொடுத்த நாள் தான் ஆயுத பூஜையாக கொண்டாடப்படுகிறது.  நவராத்திரி இந்துக்களில் குறிப்பிட்ட மக்கள் 9 நாட்கள் விரதம் இருந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இந்த நாட்களில் அசைவம்,  பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்காத உணவுகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version