Supreme Court: சிறை டூ அபராதம்.. சிறார்களின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி! - Tamil News | Supreme Court says storing watching child pornography punishable under Pocso Act | TV9 Tamil

Supreme Court: சிறை டூ அபராதம்.. சிறார்களின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

Updated On: 

23 Sep 2024 15:02 PM

சிறார்கள் ஆபாச படங்களை பார்ப்பதும், பதிவிறக்கம் செய்வதும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Supreme Court: சிறை டூ அபராதம்.. சிறார்களின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

உச்ச நீதிமன்றம் (picture credit: Getty)

Follow Us On

சிறார்கள் ஆபாச படங்களை பார்ப்பதும், பதிவிறக்கம் செய்வதும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த ஹரிஷ் (28)  என்ற இளைஞர் ஒருவர் மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம்செய்து பார்த்ததாக அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

“சிறார்களின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம்”

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான குற்றம் எனக்கூறி இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Also Read: திருப்பதி லட்டு சர்ச்சை.. பெருமாளை வேண்டி 11 நாட்கள் தவம் இருக்கும் பவன் கல்யாண்..!

இந்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பி இருந்தது. மேலும், பெண்கள், சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை எதிர்த்து குழந்தைகள் நல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுக்கள் விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் ஒரு நீதிபதி எவ்வாறு இப்படி கூற முடியும் என்றும் இது கொடுமையானது என்றும் கடுமையாக சாடியது.

மேலும், தனி நீதிபதி வெங்கடேஷின் கருத்தை 3 வாரத்திற்குள் திரும்ப பெற வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருந்தார்.  இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி பார்திவாலா அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதில்,  சிறார்கள் ஆபாச படங்களை பார்ப்பதும், பதிவிறக்கம் செய்வதும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

மூன்று ஆண்டுகள் சிறை..

மேலும் வழக்கின் தீர்ப்பில், “உயர்நீதிமன்றங்கள் மற்றும் அரசியல் சட்ட பிரிவிலும், குழந்தைகள ஆபாச படங்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பபடுகிகறது. அதற்கு மாறாக Child sexual and exploitative abuse material என்ற வார்த்தையை பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, குழந்தைகள் ஆபாசப் படங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். பிற நீதிமன்றங்கள் தனது உத்தரவுகளில் குழந்தை ஆபாசப் படம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது.

குழந்தை சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களை சேமித்து வைத்து டெலிட் செய்தாலும் குற்றம் தான். இதற்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், மீண்டும் இதே தவறை செய்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.  வணிக நோக்கத்திற்காக ஆபாச படங்களை சேமித்து வைத்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Also Read: இளம் பெண் படுகொலை.. 30 துண்டுகளாக வெட்டி ப்ரிட்ஜில் அடைத்த கொடூரம்.. பெங்களூருவில் திடுக்கிடும் சம்பவம்!

மேலும், தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என்ற தனது தீர்ப்பின் மூலம் நீதிபதி ஆனந்த் வெங்கேடேஷ் மிகப்பெரிய தவறு செய்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி பார்திவாலா ஆகியோர் கூறினர்.

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version