Kolkata Doctor Murder Case: ”முதலில் ஆண்களுக்கு சொல்லி கொடுங்கள்..” டாக்டர் கொலை குறித்து பொங்கிய சூர்யகுமார் யாதவ்!
Suryakumar Yadav: பெண் டாக்டர் கொலை வழக்கில் ஒருவரால் வன்கொடுமை செய்யப்பட்டாரா அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டரா என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. அதற்கு காரணம், அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் 150 கிராம் விந்து இருந்ததாக கூறப்படுகிறது. பெண் டாக்டருக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சூர்யகுமார் யாதவ்: கொல்கத்தாவின் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இந்தியா முழுவது பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் செய்தியாளர்களுக்கு அளித்த அறிக்கையில், பெண் டாக்டர் கொலை வழக்கில் ஒருவரால் வன்கொடுமை செய்யப்பட்டாரா அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டரா என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. அதற்கு காரணம், அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் 150 கிராம் விந்து இருந்ததாக கூறப்படுகிறது. பெண் டாக்டருக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஆண்களுக்கு சரியானவற்றை கற்பிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். கொல்கத்தா பெண் டாக்டர் நடந்த கொடுமை குறித்து சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “பெண் குழந்தைகளை பாதுகாப்பதை விட ஆண் குழந்தைக்கு முதலில் கற்றுக்கொடுங்கள். இது தவிர உங்கள் சகோதரர்கள், தந்தைகள், கணவர்கள் மற்றும் நண்பர்களிடம் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்” என தெரிவித்திருந்தார்.
Suryakumar Yadav’s Instagram story.
– Surya bhau…!!! 🫡❤️ pic.twitter.com/MyKZ7vqmAO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 18, 2024
நீதி வேண்டும்:
கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மருத்துவமனையின் செமினார் ஹாலில் பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவமனை ஊழியர் ஒருவர், ஆகஸ்ட் 10ம் தேதி கைது செய்யப்பட்டார். இதில், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் மருத்துவரை வன்கொடுமை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட டாக்டரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் ஜூனியர் டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிபிஐ விசாரணை:
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி விசாரணையை தொடங்கிய இந்த வழக்கின் விசாரணையை கொல்த்தா காவல்துறையிடம் இருந்து சிபிஐயிடம் ஒப்படைக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 13ம் தேதி உத்தரவிட்டது.
பெண் டாக்டருக்கு என்ன நடந்தது..?
கொல்கத்தாவின் லால்பஜார், ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி-மருத்துவமனையில் ஜூனியர் மருத்துவர் ஆகஸ்ட் 8-9 இடைப்பட்ட இரவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். உயிரிழந்தவர் மருத்துவக் கல்லூரியின் மருத்துவப் பிரிவில் 2ம் ஆண்டு முதுகலை மாணவர் மற்றும் பயிற்சி மருத்துவர் ஆவார். இவர், கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்தார். இரவு 12 மணிக்குப் பிறகு நண்பர்களுடன் இரவு உணவும் சாப்பிட்டார். அதன் பிறகுதான் அந்த பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.
ALSO READ: IPL 2024: ஐபிஎல் 2025ல் மீண்டும் விளையாடப்போகும் தோனி! பிசிசிஐ பக்கா பிளான்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
காலை மருத்துவக் கல்லூரியின் நான்காவது மாடியில் உள்ள செமினார் ஹாலில் மருத்துவரின் அரை நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது. சடலம் அருகே அவரது மொபைல் மற்றும் மடிக்கணினி மீட்கப்பட்டது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. மெத்தையில் சடலம் கிடந்ததுடன், மெத்தையில் ரத்தக் கறைகளும் காணப்பட்டன. இறந்த பெண் டாக்டரின் உதடுகள், கழுத்து, வயிறு மற்றும் வலது கை விரல்களில் காயங்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்தப் படுகொலையை கண்டித்து மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் மருத்துவர்களின் போராட்டம் நடத்தி வருகின்றனர்.