பீகார் முன்னாள் துணை முதல்வர் சுசில் குமார் மோடி காலமானார்!

Sushil Kumar Modi: பீகார் முன்னாள் துணை முதல்வர சுசில் குமார் மோடி புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பீகார் முன்னாள் துணை முதல்வர் சுசில் குமார் மோடி காலமானார்!

சுசில் குமார் மோடி

Updated On: 

14 May 2024 07:29 AM

சுசில் குமார் மோடி காலமானார்:

பீகார் முன்னாள் துணைத் முதலமைச்சர் சுசில் குமார் மோடி காலாமார் (72). கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 9.45 மணிக்கு சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஏப்ரல் மாதமே தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக வெளிபடையாகவே கூறினார். அதாவது, “கடந்த 6 மாதங்களாக நான் புற்றுநோயுடன் போராடி வருகிறேன். மக்களிடம் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்கிறேன். மக்களவைத் தேர்தலில் என்னால் எதுவும் செய்ய முடியாது. எல்லாவற்றையும் பிரதமரிடம் சொல்லிவிட்டேன். எப்போதும் நாட்டிற்காகவும், பீகார் மக்களுக்காவும், கட்சிக்காவும் நன்றியுடனும், அர்ப்பணிப்புடனும் இருப்பேன்” என்று தெரிவித்து இருந்தார். இப்படியான நிலையில் தான், டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறுதிச் சடகுகள் இன்று பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. இவரது மறைவுக்கு அரசியில் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி இரங்கல்:

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ” கட்சியில் எனது மதிப்புமிக்க தொண்டரும், பல தசாப்தங்களாக எனது நண்பராக இருந்தவருமான சுஷில் மோடியின் மறைவு எனக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் எனது மதிப்புமிக்க சக தொண்டரும் பீகாரில் பாஜகவின் எழுச்சி மற்றும் வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். மாணவர் அரசியலில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். அவர் கடின உழைப்பாளியாகவும், எம்எல்ஏவாகவும் இருந்தார். அரசியல் விஷயங்களை ஆழமாக புரிந்து கொள்பவர். ஒரு நிர்வாகியாக பாராட்டுக்குரிய பணிகளை செய்தார். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

Also Read : “ஹிஜாப்பை கழற்றுங்கள்” இஸ்லாமிய வாக்காளர்களின் ஆதாரை சரிபார்த்த பாஜக வேட்பாளர்!

அமித்ஷா கூறுகையில், “எங்கள் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடியின் மறைவை அறிந்து வருத்தமடைந்தேன். இன்று பீகார் அரசியலின் ஒரு சிறந்த முன்னோடி தலைவர் இழந்துவிட்டோம். ஏபிவிபி முதல் பாஜக வரை, சுஷில் குமார் அமைப்பு மற்றும் அரசாங்கத்தில் பல முக்கிய பதவிகளை அலங்கரித்தவர். அவரது அரசியல் வாழ்க்கை ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவரது மறைவால் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீண்ட நாட்களுக்கு நிரப்ப முடியாது. இந்த துயர நேரத்தில், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருடன் பாஜக துணை நிற்கிறது . அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்றார். இவர்களை தொடர்ந்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த சுசில் குமார் யாதவ்?

சுசில் குமார் மோடி நீண்ட காலமாக பீகாரில் பாஜகவின் முகமாக இருந்த வந்தார். மூத்த அரசியல்வாதியான இவர் 1990ஆம் ஆண்டு பாட்னா மத்திய தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 முதல் 2004 வரை மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்
முதலமைச்சர் நிதிஷ் குமாரின் தலைமையில் NDA அரசாகத்தில் இரண்டு முறை துணை முதல்வராக இருந்தார். அதாவது, 2005 முதல் 2013 வரை பீகார் மாநிலத்தின் துணை முதல்வராகவும், மீண்டும் 2017 முதல் 2020 வரையிலும் துணை முதல்வராக இருந்தார். இவர் எம்எல்ஏ, மக்களவை எம்.பி., மாநிலங்களவை எம்.பி. என பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். மேலும், நிதியமைச்சராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு..மேற்கு வங்கம் டாப்..ஆந்திரா எப்படி?

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?