“நியாயமான விசாரணை தேவை” ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் கெஜ்ரிவால் பதில்!
ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால், கருத்து தெரிவித்தால் அதன் நடவடிக்கையை பாதிக்கலாம். ஆனால், நியாயமான விசாரண நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நீதி வழங்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் இரண்டு தரப்புகள் உள்ளன. எனவே, போலீசார் நியாயமாக விசாரணை நடத்தி நீதி வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நியாயமான விசாரணை தேவை: டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்திருக்கிறார். அப்போது பேசிய அவர், “இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால், கருத்து தெரிவித்தால் அதன் நடவடிக்கையை பாதிக்கலாம். ஆனால், நியாயமான விசாரண நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நீதி வழங்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் இரண்டு தரப்புகள் உள்ளன. எனவே, போலீசார் நியாயமாக விசாரணை நடத்தி நீதி வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்:
டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஸ்வாதி மலிவால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அவரது உதவியாளரால் தாக்கப்பட்டதாக போலீஸில் புகார் அளித்தார். கடந்த 13ஆம் தேதி டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட ஸ்வாதி மலிவால் டெல்லி முதல்வரின் இல்லத்தில் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் தாக்கப்பட்டதாக புகார் அளித்தார். சிறிது நேரத்தில் டெல்லி சிவில் லைன்ஸ் பகுதி காவல் நிலையத்திற்கு ஸ்வாதி மலிவால் வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: வங்கதேச எம்.பி. கொல்கத்தாவில் படுகொலை? பரபர பின்னணி!
இது தொடர்பாக ஸ்வாதி மலிவாலிடம் உயர் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்றபோது அவரின் உதவியாளர் பிபவ் குமார் கொடூரமாக தாக்கியதாக குற்றம்சாட்டினார். ”தாக்குதலின்போது நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்து. உதவிக்காக பலமுறை கத்திக் கொண்டிருந்தேன். என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, நான் அவரை என் கால்களால் தள்ளிவிட்டேன். அந்த நேரத்தில், அவர் என்னை இழுத்து சென்று என் ஆடையை கிழித்தார்.
மேலும், மார்பு, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் கால்களால் தாக்கினார். இதனால், தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டாக வாக்குமூலம் அளித்தார். இது தொடர்பான மருத்துவ அறிக்கையில் ஸ்வாதி மலிவாலை தாக்கியதில் அவரது இடது கால் மற்றும் வலது கன்னத்தில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். பிபவ் குமாரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார்.
Also Read: “நான் மனிதப் பிறவியே அல்ல.. இந்த பூமிக்கு என்னை அனுப்பியது கடவுள்தான்” பிரதமர் மோடி பேச்சு