5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Swearing-in ceremony 2024: மோடி அமைச்சரவை.. மத்திய அமைச்சர்களின் முழு பட்டியல் இதோ!

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்வில் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியின் பதவியேற்பு விழாவில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், அரசியில் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், குடிமக்கள் என 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பிரதமராக மோடி பதவியேற்றதை அடுத்து, கேபினட் அமைச்சர்கள் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டனர். முதலாவதாக ராஜ்நாத் சிங் பதவியேற்றுக் கொண்ட  நிலையில், இரண்டாவது அமித்ஷா பதவியேற்றுக் கொண்டார்.

Swearing-in ceremony 2024: மோடி அமைச்சரவை.. மத்திய அமைச்சர்களின் முழு பட்டியல் இதோ!
மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சர்கள்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 09 Jun 2024 22:05 PM

பிரதமராக பதவியேற்ற மோடி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்வில் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியின் பதவியேற்பு விழாவில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், அரசியில் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், குடிமக்கள் என 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பிரதமராக மோடி பதவியேற்றதை அடுத்து, கேபினட் அமைச்சர்கள் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டனர். முதலாவதாக ராஜ்நாத் சிங் பதவியேற்றுக் கொண்ட  நிலையில், இரண்டாவது அமித்ஷா பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்கள் யார் யார்? அவர்களுக்கான இலாகா என்ன என்பதை பார்ப்போம்.

மத்திய அமைச்சர்கள் பட்டியல்:

  1. ராஜ்நாத் சிங்
  2. அமித் ஷா
  3. நிதின் கட்காரி
  4. ஜெ.பி.நட்டா
  5. சிவராஜ் சிங் சௌகான்
  6. நிர்மலா சீதாராமன்
  7. எஸ்.ஜெய்சங்கர்
  8. மனோகர் லால் கட்டர்
  9. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் குமாரசாமி
  10. பியூஷ் கோயல்
  11. தர்மேந்திர பிரதான்
  12. ஜிதன் ராம் மஞ்சி
  13. ராஜீவ் ரஞ்சன் சிங்
  14. சர்பானந்தா சோனோவால்
  15. விரேந்திர குமார்
  16. ராம் மோகன் நாயுடு
  17. பிரகலாத் ஜோஷி
  18. ஜுவல் ஓரம்
  19. கிரிராஜ் சிங்
  20. அஷ்விணி வைஷ்ணவ்
  21. ஜோதிராதித்ய சிந்தியா
  22. பூபேந்தர் யாதவ்
  23. கஜேந்திர சிங் ஷெகாவத்
  24. அன்னபூர்ணா தேவி
  25. கிரண் ரிஜிஜு
  26. ஹரிதிக் சிங் பூரி
  27. மன்சுக் மாண்டவியா
  28. கிருஷ்ணா ரெட்டி
  29. சிராக் பாஸ்வான்
  30. சிஆர் பாட்டீல்
  31. ராவ் இந்தர்ஜித் சிங்
  32. ஜிதேந்திர சிங்
  33. அர்ஜுன் ராம் மேக்வால்
  34. பிரதாப்ராவ் கணபத்ராவ் ஜாதவ்
  35. ஜெயந்த் சவுத்ரி
  36. ஜிதின் பிரசாத்
  37. ஸ்ரீபாத் நாயக்
  38. பங்கஜ் சவுத்ரி
  39. கிரிஷன் பால் குர்ஜார்
  40. ராம்தாஸ் அத்வாலே
  41. ராம் நாத் தாக்கூர்
  42. நித்யானந்த் ராய்
  43. அனுப்ரியா பட்டேல்
  44. வி சோமண்ணா
  45. சந்திர சேகர் பெம்மாசானி
  46. எஸ்பி சிங் பாகேல்
  47. ஷோபா கரந்த்லாஜே
  48. கீர்த்தி வர்தன் சிங்
  49. பிஎல் வர்மா
  50. சாந்தனு தாக்கூர்
  51. சுரேஷ் கோபி
  52. எல்.முருகன்
  53. அஜய் தம்தா
  54. பாண்டி சஞ்சய் குமார்
  55. கமலேஷ் பாஸ்வான்
  56. பகீரத் சவுத்ரி
  57. சதீஷ் சந்திர துபே
  58. சஞ்சய் சேத்
  59. ரவ்னீத் சிங் பிட்டு
  60. துர்கா தாஸ் உய்கே
  61. ரக்ஷா காட்சே
  62. சுகந்தா மஜும்தார்
  63. சாவித்ரி தாக்கூர்
  64. டோகன் சாஹு
  65. ராஜ்பூஷன் சவுத்ரி
  66. பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா
  67. ஹர்ஷ் மல்ஹோத்ரா
  68. நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா

உள்ளிட்டோர் திரௌபதி முர்மு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்றுக் கொண்ட 71 அமைச்சர்களில் 30 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இவர்களில் 27 பேர் ஓபிசி பிரிவையும், 10 பேர் எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள்.

Latest News