India Team: 17 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற இந்திய அணி.. வீரர்களுடன் கலந்துரையாடி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..

இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு விருந்து தொடங்கியது. அதன்படி, உலக கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணியில் இடம்பெற்று இருந்த வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விருந்தில் கலந்துகொண்டனர்.

India Team: 17 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற இந்திய அணி.. வீரர்களுடன் கலந்துரையாடி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..

இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி

Updated On: 

04 Jul 2024 17:01 PM

இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி: இன்று காலை தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள், டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தனர்.அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. இந்த நிலையில், இறுதிப்போட்டி நடைபெற்ற நான்கு இடத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு பிறகு இந்திய அணி இன்று காலை சுமார் 6.30 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. தனிவிமானம் மூலம் தாயகம் திரும்பிய வீரர்களுக்கு நள்ளிரவு முதல் டெல்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் குவிந்து வரவேற்பு அளித்தனர். இந்தியா.. இந்தியா.. என முழக்கங்களை எழுப்பி வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து, வீரர்கள் தங்க உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர ஹோட்டலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை இந்தியா மண்ணிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாக அடைந்தனர். தாயகம் திரும்பிய வீரர்கள் சிறப்பு பேருந்து மூலம் பிரதமரின் இல்லத்திற்கு சென்றனர். அதன்பின், கோப்பையை பிரதமரிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர். கலந்துரையாடலை தொடர்ந்து அவர்களுக்கு பிரதமர் மோடி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு விருந்து தொடங்கியது. அதன்படி, உலக கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணியில் இடம்பெற்று இருந்த வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விருந்தில் கலந்துகொண்டனர்.


பிரதமர் மோடி உடனான சந்திப்பு நிறைவடைந்ததுமே, இந்திய அணி வீரர்கள் டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்டனர். அங்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வான்கடே மைதானம் வரை திறந்தவெளி பேருந்தில் டி20 உலகக் கோப்பையுடன் ஊர்வலமாக செல்ல இருக்கின்றனர். மாலை 5 மணிக்கு இந்த பேரணி தொடங்க உள்ளது. அதன் முடிவில் வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கான பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது. இந்த ஊர்வலம் மற்றும் பாராட்டு விழாவை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையில் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

Also Read: ஜியோ கொடுத்த ஷாக்.. இனி 5ஜி இப்படித்தான் .. விலை உயர்வால் வந்த மாற்றம்!

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?