MPs swearing-in: நாடாளுமன்றத்தில் காத்திருக்கும் சம்பவம்.. ஜூன் 25ல் பதவியேற்கும் தமிழக எம்.பிக்கள்!
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்நடு எம்.பிக்கள் ஜூன் 25ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பியான ரவிகுமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், "விசிக தலைவர் திருமாவளவன், நான் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்.பிக்கள் ஜூன் 25ஆம் தேதி பகல் 1 மணி முதல் 3 மணிக்குள் பதவி ஏற்கிறோம். முதல் நாளான 24ஆம் தேதி மகாராஷ்ராவைச் சேர்ந்த 15 பேர் உட்பட 280 பேர் பதவி ஏற்கின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
நாளை கூடுகிறது 18வது மக்களவை கூட்டம்: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன. 240 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. தனிபெரும்பான்மை 272 கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்திய அக்கட்சி ஆட்சியமைத்தது. பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றுள்ளார். இதற்கிடையில், 18வது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24ஆம் தேதி அதாவது நாளை நடைபெற உள்ளது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு புதிய எம்.பிக்கள் பதவியேற்பு மற்றும் அவைத் தலைவர் தேர்வு நடைபெற உள்ளது. மாநிலங்களவையின் 264வது அமர்வு ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை நடக்கிறது.
ஜூன் 27ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றயுள்ளார். குடியரசுத் தலைவர் உரையில் புதிய அரசின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் அடிக்கோடிட்ட காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு பிறகு தனது அமைச்சர்களை மோடி நாடாளுமன்றத்திற்கு அறிமுகப்படுத்துவார். இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு சன்றி தெரிவக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். இறுதியாக, விவாதத்துக்கு பிரதமர் மோடி பதலளித்து உரையாற்றுவார்.
Also Read: முதுநிலை நீட் தேர்வு ரத்து… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
ஜூன் 25ல் பதவியேற்கும் தமிழ்நாடு எம்.பிக்கள்:
தலைவர் @thirumaofficial , நான் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்.பிக்கள் ஜூன் 25 பகல் 1 மணி முதல் 3 மணிக்குள் பதவி ஏற்கிறோம். முதல் நாளான ஜூன் 24 இல் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 15 பேர் உட்பட 280 பேர் பதவி ஏற்கின்றனர். #Swearing_in #Loksabha #Tamil pic.twitter.com/A3FH5xPCJJ
— Dr D.Ravikumar (@WriterRavikumar) June 23, 2024
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்நடு எம்.பிக்கள் ஜூன் 25ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பியான ரவிகுமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், “விசிக தலைவர் திருமாவளவன், நான் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்.பிக்கள் ஜூன் 25ஆம் தேதி பகல் 1 மணி முதல் 3 மணிக்குள் பதவி ஏற்கிறோம். முதல் நாளான 24ஆம் தேதி மகாராஷ்ராவைச் சேர்ந்த 15 பேர் உட்பட 280 பேர் பதவி ஏற்கின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி கைப்பற்றியது. திமுக 22, காங்கிரஸ் 9 +1 (புதுச்சேரி உட்பட), விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தலா இரண்டு, மறுமலர்ச்சி திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலா ஒரு இடங்களையும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்.. பலி எண்ணிக்கை 57ஆக உயர்வு!