Ratan Tata death : ஏழைகளின் காப்பாளர் ரத்தன் டாடா காலமானார்! - Tamil News | Tata Sons Former leader Ratan Tata passed away at Mumbai hospital | TV9 Tamil

Ratan Tata death : ஏழைகளின் காப்பாளர் ரத்தன் டாடா காலமானார்!

RIP Ratan Tata | கடந்த 1937 ஆம் ஆண்டு புகழ்பெற்ற டாடா குழுமத்தில் பிறந்தவர் ரத்தன் டாடா. ஆரம்ப காலக்கத்தில் சவாலான சூழல்களை சந்தித்த டாடாவுக்கு அதுவே வாழ்க்கை பாடமாக மாறியது. இதனால் பக்குவமடைந்த அவர், தொழில் வளர்ச்சியிலும் தனது அனுபத்தை நிலைநாட்டினார்.

Ratan Tata death : ஏழைகளின் காப்பாளர் ரத்தன் டாடா காலமானார்!

ரத்தன் டாடா

Updated On: 

10 Oct 2024 01:41 AM

இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஐசியுவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ரத்தன் டாடா தனது 86வது வயதில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு தொழில்திபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையு படிங்க : TVK Party: அரசியலில் முதல் வெற்றி.. கவுன்சிலராக பதவியேற்ற த.வெ.க., நிர்வாகி.. மகிழ்ச்சியில் விஜய்!

ஏழைகளின் காப்பாளராக திகழ்ந்த ரத்தன் டாடா

கடந்த 1937 ஆம் ஆண்டு புகழ்பெற்ற டாடா குழுமத்தில் பிறந்தவர் ரத்தன் டாடா. ஆரம்ப காலக்கத்தில் சவாலான சூழல்களை சந்தித்த டாடாவுக்கு அதுவே வாழ்க்கை பாடமாக மாறியது. இதனால் பக்குவமடைந்த அவர், தொழில் வளர்ச்சியிலும் தனது அனுபத்தை நிலைநாட்டினார். 1962 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் இணைந்த அவர், டாடா மோட்டர்ஸில் பணியாற்ற தொடங்கினார். தனது திறமையால் இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவராக உருவானார் ரத்தன் டாடா. அதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்தார். ரத்தன் டாடா சிறந்த தொழிலதிபர் மட்டுமன்றி, ஏழைகளின் காப்பாளராகவும் திகழ்ந்தார். ரத்தன் டாடா தனது சாமார்த்தியத்தால் குடும்ப வருமானத்தை மிகப்பெரிய சாம்ராஜிமாக மாற்றிய பெருமை கொண்டவர். அவர் டாடா குழுமத்தில் பொருப்பில் இருந்தபோது பல முன்னேற்றங்களை செய்தார். குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், டாடா குழுமம் சுமார் 100 மில்லியன் டாலர் வருமானம் ஈட்ட செய்தார்.

இதையும் படிங்க : Airtel : இனி மோசடிகள் குறித்து கவலை இல்லை.. ஏர்டெல் வழங்கும் அசத்தல் சேவை.. முற்றிலும் இலவசம்!

விமர்சனங்களை சந்திக்காத ஒரே தொழிலதிபர் ரத்தன் டாடா

ரத்தன் டாடா வருமானம், தொழில் முன்னேற்றத்தில் மட்டு கவனம் செலுத்தாமல் பொதுமக்கள் மீதும் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். அதுதான் இந்திய மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அதீத அன்புக்கு காரணமாக மாறியது. அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் குறைந்த விலையில் தரமான பொருட்களை அறிமுகம் செய்தார் ரத்தன் டாடா. டாடாவின் இந்த நேர்மை மற்றும் சமூகத்தின் மீதான அவரது அக்கறை அவரை மக்கள் மத்தியில் உயர்ந்த மனிதராக மாற்றியது. தரமான பொருட்களை தயாரித்து வந்த டாடா, நாளடைவில் டாடா பொருட்கள் என்றாலே தரம் மிக்கதாக இருக்கும் என டாடா குழுமத்தை புகழ்பெற செய்தார். இந்தியாவில் உள்ள பல்வேறு தொழிலதிபர்கள் கடும் விமர்சனங்களை சந்தித்தாலும் எந்தவித விமர்சனங்களிலும் சிக்காதவர் டாடா ஒருவர் மட்டுமே.

இதையும் படிங்க : CJI DY Chandrachud: எதிர்காலம் பற்றிய அச்சம் உள்ளது.. தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு!

எளிமையின் சிகரமாக வாழ்ந்த ரத்த டாடா

சிறந்த தொழிலதிபராக மட்டுமன்றி சிறந்த மனிதராகவும் விளங்கினார் ரத்தன் டாடா. தனது முதுமை காலத்தில் குடும்ப தொழில் இருந்து விலகி இருந்த ரத்தன் டாடா, வாடகை வீட்டில் வசித்தது அவரது எளிமையை காட்டும் விதமாக அமைந்தது. இளைஞர்களுடன் இயல்பாக பழகுவது, சமூதாயத்தின் மீது அக்கறை கொண்டிருப்பது என டாடாவின் ஒவ்வொரு செயல்களும் மக்களை ஈர்க்கும் விதமாக அமைந்தன. பல தொழிலதிபர்கள் தொழிலில் லாபம் ஈட்டி, முதல் இடத்தை பிடிக்க முனைப்பு காட்டியபோது டாடா தரத்திலும், மக்களின் நலனிலும் மட்டுமே கவனம் செலுத்தினார். தனது நிறுவனங்கள் தயாரித்த பொருட்கள் மூலம் மட்டுமன்றி, தொண்டு நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வந்தார் டாடா.

இதையும் படிங்க : இந்தியன் தாத்தாவாக மாறிய கணவன்.. லஞ்சம் வாங்கிய மனைவிக்கு ஜெயில்!

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பிற்கு உடல்நிலை மீண்டும் மோசமானதால் முன்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். டாடாவின் இந்த மறைவு இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பேரிழப்பாகும்.

மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் என்னாகும்?
செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
Exit mobile version