Team India Rally: இந்திய வீரர்கள் கோப்பையுடன் பேரணி.. கொட்டும் மழையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..
தாயகம் திரும்பிய வீரர்கள் சிறப்பு பேருந்து மூலம் பிரதமரின் இல்லத்திற்கு சென்றனர். அதன்பின், கோப்பையை பிரதமரிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வில், உலக கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணியில் இடம்பெற்று இருந்த வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோப்பையுடன் இந்திய வீரர்கள் வெற்றி பேரணி: தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள் கோப்பையுடன் மும்பை கடற்கடை சாலையில் பேரணியாக அணிவகுத்து சென்றனர். கொட்டும் மழையிலும் லடசக்கணக்கான ரசிகர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. இந்த நிலையில், இறுதிப்போட்டி நடைபெற்ற நான்கு இடத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு பிறகு இந்திய அணி இன்று காலை சுமார் 6.30 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. தனிவிமானம் மூலம் தாயகம் திரும்பிய வீரர்களுக்கு நள்ளிரவு முதல் டெல்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் குவிந்து வரவேற்பு அளித்தனர். இந்தியா.. இந்தியா.. என முழக்கங்களை எழுப்பி வரவேற்பு அளித்தனர்.
#WATCH | Mumbai: Cricket fans gathered at Marine Drive make way for an ambulance to pass through the crowd.
Team India – the #T20WorldCup2024 champions – will have a victory parade here shortly. pic.twitter.com/WvTN7z1J7z
— ANI (@ANI) July 4, 2024
தாயகம் திரும்பிய வீரர்கள் சிறப்பு பேருந்து மூலம் பிரதமரின் இல்லத்திற்கு சென்றனர். அதன்பின், கோப்பையை பிரதமரிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வில், உலக கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணியில் இடம்பெற்று இருந்த வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
CRAZE FOR INDIAN CRICKET IN MUMBAI. 🤯 pic.twitter.com/h5t14dLv4o
— Johns. (@CricCrazyJohns) July 4, 2024
அதன் பின் அங்கிருந்து மும்பை புறப்பட்டு சென்றனர். அங்கு வான்கடே மைதானத்தில் கோப்பையுடன் பேரணி சென்றனர். இதற்கு முன்னதாக மும்பை கடற்கரை சாலையில் வீரர்கள் பேரணி சென்றனர். கடற்கரை சாலை முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். வழி எங்கும் ரசிகர்களின் உறசாக வரவேற்பு நிறைந்து காணப்பட்டது. மும்பையில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் குவிந்தனர். 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணியில் வெற்றி நாடே கொண்டாடி வருகிறது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.