5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

புனே சொகுசு கார் விபத்தில் நடந்தது என்ன? 2 பேரை பலி வாங்கிய சம்பவத்தின் பின்னணி!

Pune Porsche Accident : புனேயில் 17 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் 24 வயதான இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களின் இன்னுயிரை இழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. விபத்தில் சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு 24 மணி நேரத்தில் ஜாமின் கொடுத்தது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. 17 வயது சிறுவனை வயது முதிர்ந்தவராக கருத வேண்டும் என மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

புனே சொகுசு கார் விபத்தில் நடந்தது என்ன? 2 பேரை பலி வாங்கிய சம்பவத்தின் பின்னணி!
புனேயில் விபத்தை ஏற்படுத்திய கார்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 22 May 2024 18:20 PM

2 டெக்கிகளை கொன்ற புனே விபத்து: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஐ.டி வல்லுநர்கள் இருவரைக் கொன்ற விபத்தில் சிக்கிய சொகுசு போர்ஸ் டெய்கான் காரின் நிரந்தரப் பதிவு மார்ச் மாதம் முதல் நிலுவையில் உள்ளதாக மாநில போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், எலக்ட்ரிக் சொகுசு காரான செடான் போர்ஷே டெய்கான், ₹1.61 கோடி விலை ஆகும். மேலும், இந்தக் கார் ரூ.2.44 கோடி வரை விலை போகலாம் எனவும கூறப்படுகிறது. இந்தக் காரை, பிரபல பில்டரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தானது புனே கல்யாணி நகரில் ஞாயிற்றுக்கிழமை (மே 19,2024) அதிகாலை விபத்து நிகழ்ந்துள்ளது.

இதற்கிடையில் கார் 2024 மார்ச் மாதம் இறக்குமதி செய்யப்பட்டதும், பெங்களூருவில் இறக்குமதி செய்த வியாபாரி தற்காலிக பதிவெண் உடன் காரை மகாராஷ்டிராவுக்கு அனுப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், புனே வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) விசாரித்த போது, குறிப்பிட்ட பதிவுக் கட்டணம் செலுத்தப்படாதது கண்டறியப்பட்டு, நடைமுறையை முடித்ததற்கான தொகையை உரிமையாளரிடம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், வாகனம் கொண்டு வரப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் பதிவு

தொடர்ந்து, மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களுக்கு சாலை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது, போர்ஸ் டெய்கான் காரின் பதிவுக் கட்டணம் ரூ.1,758 ஆகும். இதில், ரூ.1,500, ஸ்மார்ட் கார்டுக்கும், ஆர்.சி புக் (RC) கட்டணத்திற்கு ரூ.200 மற்றும் அஞ்சல் கட்டணங்களுக்கு ₹58 அடங்கும். தற்போது விபத்தில் சிக்கிய இந்தக் காரின் விலை ரூ.96 லட்சம் முதல் 1.86 கோடி இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.

இது மட்டுமின்றி, கர்நாடகாவால் வழங்கப்பட்ட தற்காலிக பதிவுச் சான்றிதழை மார்ச் முதல் செப்டம்பர் 2024 வரை செல்லுபடியாகும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். எனினும், ஆர்டிஓவிடம் நிரந்தரப் பதிவு பெறுவது உரிமையாளரின் பொறுப்பு என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்காலிகப் பதிவெண் கொண்ட வாகனங்களை இந்தக் காலக்கட்டத்தில் ஆர்.டி.ஓ.வுக்கு மட்டுமே இயக்க முடியும்.

சிறுவனின் தந்தை கைது

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை (மே 21) காரை ஓட்டிய சிறுவனுக்கு மதுபானம் வழங்கியதாக அவரின் தந்தை மற்றும் உணவக நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கார், கல்யாணி நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு ஐடி பொறியாளர்கள் மீது மோதியது. விபத்தின் தீவிரம் இருந்தபோதிலும், சிறார் நீதி வாரியம் (JJB) விபத்து நடந்த சில மணிநேரங்களில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியது, இது நாடு தழுவிய சீற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு குறித்து பேசிய மராட்டிய துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், “17 வயது சிறுவனை வயது முதிர்ந்தவராக கருத வேண்டும்” என்றார்.

இந்த விபத்தில் இறந்தவர்கள் அனிஷ் அவதியா மற்றும் அஷ்வினி கோஷ்தா ஆகும். 24 வயதான இருவரும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் புனேவில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.
இந்த வழக்கு குறித்து பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “நான் வழக்கை ஆய்வு செய்தேன். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்தேன். விபத்துக்குப் பிறகு, காவல்துறை உடனடியாக ஐபிசி பிரிவு 304 ஐ பொருத்தமான விதிகளுடன் செயல்படுத்தியது்; ஜேஜேபிக்கு முன் அதன் ரிமாண்ட் மனுவில், டீனேஜருக்கு 17 வயது மற்றும் எட்டு மாதங்கள் என்பதால், அவரை வயது வந்தவராக கருத வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : வங்கதேச எம்.பி. கொல்கத்தாவில் படுகொலை? பரபர பின்னணி!

Latest News