மயோனைஸ் பயன்படுத்த ஓராண்டிற்கு தடை.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.. இதுதான் காரணமா? - Tamil News | telagana ban mayonnaise for one year amid food poisoning concern | TV9 Tamil

மயோனைஸ் பயன்படுத்த ஓராண்டிற்கு தடை.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.. இதுதான் காரணமா?

மயோனைஸ்: தெலங்கானாவில் மோமோஸ் சாப்பிட்டு இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து, மாநில முழுவதும் மயோனைஸ் பயன்படுத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு எந்த ஒரு கடைகளிலும் மயோனைஸ் பயன்படுத்த தடை விதித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

மயோனைஸ் பயன்படுத்த ஓராண்டிற்கு தடை.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.. இதுதான் காரணமா?

மயோனைஸ் (picture credit: Getty)

Updated On: 

31 Oct 2024 08:37 AM

தெலங்கானாவில் மோமோஸ் சாப்பிட்டு இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து, மாநில முழுவதும் மயோனைஸ் பயன்படுத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு எந்த ஒரு கடைகளிலும் மயோனைஸ் பயன்படுத்த தடை விதித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. மயோனைஸ் என்பது உணவு பொருட்களின் சுவையை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக, பர்கர், சாண்ட்விச், ஷவர்மா போன்ற உணவு பொருட்களில் இது பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற உணவு பொருட்களில் மயோனைஸ் சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவை இருக்கும் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

மயோனைஸ் பயன்படுத்த ஓராண்டிற்கு தடை

மயோனைஸ் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, வினிகர், பூண்டு, உப்பு மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது சைவ பிரியர்களுக்கு ஏற்றவாறு முட்டை கலக்காமலும் விற்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தெலங்கானாவில் புட் பாய்சன் தொடர்பான புகார் தொடர்ந்த வந்தது.

இதனால் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முட்டையில் செய்யப்படும் மயோனைஸ் மூலம் பலரும் உடல் உபாதைகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சமீபத்தில் கூட ஹைதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட 33 வயதான பெண் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : விஷமாக மாறிய மோமோஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்.. அதிர்ச்சி சம்பவம்!

மேலும், அதே கடையில் மோமோஸ் சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  இதனால் தீவிரமாக விசாரணை நடத்திய அதிகாரிகள்,  மயோனைஸுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

காரணம் என்ன?

ஓராண்டிற்கு மயோனைஸ் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த  புதிய உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  இதுகுறித்து தெலுங்கானா உணவு பாதுகாப்பு ஆணையர் கூறுகையில், “பல கடைகளில் முட்டை அடிப்படையிலான மயோனைஸைப் பயன்படுத்துகின்றன.

இது சாண்ட்விச்கள், மோமோஸ், ஷவர்மா மற்றும் சிக்கன் போன்ற உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.  இது முட்டையின் மஞ்சள் கருவை எண்ணெயுடன் சேர்த்து, வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலந்து சுவைக்க வைக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் பல புகார்கள் வந்தன. இந்த புகாரின்பேரில் ஆய்வு மேற்கொண்டதில் பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் சாப்பிடுவதாக விஷமாக மாறுவது தெரியவந்தது. இதனால் மயோனைஸ் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Also Read : குக்கரில் இந்த உணவுகளை மட்டும் சமைக்காதீங்க.. உடலுக்கு மிகவும் தீங்கு..!

மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள்?

மயோனைஸில் அதிகப்படியான கலோரிகள் உள்ளன. ஒரு தேக்கரண்டி மயோனைஸில் சுமார் 100 கலோரிகள் இருக்கிறது. எனவே, இதனை சாண்விட்ச், பர்கர், மோமோஸ் உடன் சேர்ந்து சாப்பிடும்போது உடல் எடையை அதிகரிக்கும். மயோனைஸில் அதிக அளவு ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது இரத்த அழுதத்தை அதிகரிக்கலாம்.

மேலும், மயோனைஸில் கெட்ட கொழுப்புகள் அதிகமாக உள்ளதால் இதய நோய் அபாயத்தை அதிகரிக்க செய்யலாம். மயோனைஸில் செயற்கை திடவங்கள் பயன்படுத்தப்படுவதால் தலைவலி, குமட்டல், வாந்தி, மயக்கம் ஏற்படலாம்.

மயோனைஸை அதிகமாக உட்கொள்வது கீல்வாதத்தின் அபாயத்தை அதிகரிக்கும். இதில் உள்ள ஒமேகா 26 கொழுப்பு அமிலங்கள் உடலில் முடக்கு வாதம் போன்ற நோய்களில் அபாயத்தை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்!
தீபாவளி நாளில் செய்யக்கூடாத விஷயங்கள்..!
எண்ணெய் அதிகம் இழுக்காமல் வடை சுடுவது எப்படி?
உங்கள் மொபைல் போனை எப்போது மாற்ற வேண்டும் - தெரிஞ்சிக்கோங்க!