Telagana Election Exit Poll 2024: தெலங்கானாவில் கடும் போட்டி.. கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
Lok sabha Elections Exit Poll 2024 Results : டிவி டிவி 9 கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், தெலங்கானாவில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 38.6 சதவீத வாக்குகளையும், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 33 சதவீத வாக்குகளையும், சந்திரசேகர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி 0.23 சதவீத வாக்குகளையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 2.0 சதவீத வாக்குகளையும் பெறும் கணிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா கருத்துக் கணிப்பு முடிவுகள்: தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, பாரத் ராஷ்ட்ர சமிதி ஆகிய கட்சிகள் தனித்து களம் கண்டன. தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதை அடுத்து மாநிலத்தின் முதல்வராக சந்திரசேகர ராவ் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த 3வது சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார். இந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலுக்கான பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை டிவி 9 வெளியிட்டது. அதன்படி, மொத்தமுள்ள 17 தொகுதிகளில் காங்கிரஸ் 8 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக 7 இடங்களிலும், பாரத் ராஷ்ட்ர சமிதி மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சி தலா ஒரு இடத்திலும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 38.6 சதவீத வாக்குகளையும், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 33 சதவீத வாக்குகளையும், சந்திரசேகர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி 0.23 சதவீத வாக்குகளையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 2.0 சதவீத வாக்குகளையும் பெறும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏபிபி சி வோட்டர் வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி, தெலங்கானாவில் காங்கிரஸ் 7 முதல் 9 தொகுதிகளையும், பாஜக கூட்டணி 7 முதல் 9 தொகுதிகளையும், இதர கட்சிகளில் ஒரு கட்சியானது ஒரு தொகுதியையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிலவரம்:
தமிழ்நாட்டில் திமுக 35 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 4 இடங்களை கைப்பற்றும் என்று டிவி 9 செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. I.N.D.I.A கூட்டணியில் உள்ள திமுக 21 இடங்களில் வென்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக தலா ஒரு இடங்களையும், இடதுசாரிகள் நான்கு இடங்களையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமியின் அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.