5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Telangana: ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்.. என்ன தெரியுமா?

கட்வால் - வனபர்த்தி வழித்தடத்தில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். ரக்ஷாபந்தனை முன்னிட்டு தனது சகோதரனுக்காக ராக்கி கயிறு கட்டச் சென்ற நிலையில் அப்பெண்ணுக்கு ஓடும் பேருந்தில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஓட்டுநரும் நடத்துனரும் சக பயணிகளும் ஒரு கணம் திகைத்துப் போயினர்.

Telangana: ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்.. என்ன தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 20 Aug 2024 21:03 PM

இலவச பாஸ்: தெலங்கானாவில் ரக்ஷாபந்தன் கொண்டாட சென்ற கர்ப்பிணி ஒருவருக்கு ஓடும் பேருந்தில் பிரசவம் நடந்ததை தொடர்ந்து அந்த குழந்தைக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ஆவணி மாதம் வரும் பௌர்ணமி நாளை கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த பண்டிகை நேற்று (ஆகஸ்ட் 19) இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. சகோதரன், சகோதரி உறவை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் இந்நாளில் ஒவ்வொரு சகோதரிகளும் தாங்கள் சகோதரனாக பாவிக்கும் ஆண்களின் கையில் ராக்கி கயிறு கட்டி வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என வாழ்த்துவார்கள். இதற்கு சகோதரர்கள் தரப்பில் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டு எத்தகைய நிலை வந்தாலும் நான் உனக்கு ஆதரவாக இருப்பேன் என உறுதியளிக்கும் நிகழ்வாக ரக்ஷாபந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Manu Bhaker: ஸ்டாலினை தெரியாது.. தமிழ்நாட்டில் வந்து மனுபாக்கர் சொன்ன பதில்!

இப்படியான நிலையில் தெலங்கானா மாநிலம் கட்வால் – வனபர்த்தி வழித்தடத்தில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். ரக்ஷாபந்தனை முன்னிட்டு தனது சகோதரனுக்காக ராக்கி கயிறு கட்டச் சென்ற நிலையில் அப்பெண்ணுக்கு ஓடும் பேருந்தில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஓட்டுநரும் நடத்துனரும் சக பயணிகளும் ஒரு கணம் திகைத்துப் போயினர். இதனைத் தொடர்ந்து சாலையின் ஓரம் பேருந்து நிறுத்தப்பட்டது.

அப்பெண்ணிடம் வலியின் நிலை குறித்து பெண் நடத்துநர் பாரதி விசாரித்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்பேருந்தில் செவிலியர் ஒருவர் பயணித்துள்ளார்.  அவர் அப்பெண்ணை பரிசோதித்து விட்டு பேருந்திலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து நடத்துனர் பாரதியும் அந்த செவிலியரும் இணைந்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக பெண்ணும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு உடனடியாக பெண் நடத்துநர் பாரதி மற்றும் செவிலியர் பிரசவம் பார்த்தது சமூக வலைத்தளங்களில் தகவலாக பரவி மிகப்பெரிய பாராட்டை பெற்றது.

இதையும் படிங்க: Ration Card : இனி ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதில் இதுவா.. வெளியான முக்கிய தகவல்.. என்ன தெரியுமா?

இதற்கிடையில் சமீபத்தில் தான் தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்தில் பிரசவம் நிகழ்ந்து பிறக்கும் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பாஸ் வழங்கப்படும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் பேருந்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிக்கும் பாஸை தெலுங்கானா அரசு போக்குவரத்துக் கழகம் வழங்கி சிறப்பித்தது. அது மட்டுமல்லாமல் அதே பேருந்தில் பயணித்து அப்பெண்ணுக்கு உதவிய செவிலியர் அலிவேலு மங்கம்மாவுக்கு மேலும் ஓர் ஆண்டுக்கு இலவச பயணம் செய்யும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

Latest News