Telagana Earthquake: தெலங்கானாவில் திடீர் நிலநிடுக்கம்.. பதறிய மக்கள்.. நடந்தது என்ன?
தெலங்கானாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை 7.27 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து சுமார் 250 கி.மீ தூரத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை 7.27 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து சுமார் 250 கி.மீ தூரத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத், ஹனுமகொண்டா, வாரங்கல், கம்மம், ரங்காரெட்டி, பத்ராத்ரி கொத்தகுடேம், ஜக்கையாபேட்டை, மனுகுரு, கோதாவரி கானி, பூபாலப்பள்ளி, சார்லா, சிந்தகனி, பத்ராசலம், விஜயவாடா, ஜக்கையாபேட்டை, திருவூரு, மங்களகிரி, சென்னூர், ஜெய்ப்பூர் மண்டல், மங்களகிரி, மஞ்சூர், ஜெய்ப்பூர் மண்டல் ஆகிய இடங்களில் 2 நிமிடங்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
காலை 7.20 முதல் 7.26 மணி வரை நிலநடுக்கம் உணரப்பட்டது. அப்போது கோதாவரி ஆற்றின் படுகையில் அதிர்வு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 20 ஆண்டுகளில் முதல்முறையாக தெலுங்கானாவில் இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
VIDEO | An earthquake of 5.3 magnitude with epicentre in Mulugu, Telangana, hit on Wednesday morning. The tremors were reported at several places in Telangana and Andhra Pradesh. Visuals from Vijayawada.
(Source: Third Party)#Telangana #earthquake pic.twitter.com/8r34SlkL0G
— Press Trust of India (@PTI_News) December 4, 2024
இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறினர். சாலைகளில் பலரும் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலநடுக்கத்தால் யாருக்கு எந்த பாதிப்பு தற்போது வரை ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கம் தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில், ”‘தெலங்கானாவில் 250 கி.மீ தொலைவில் இருக்கும் முலுகு மாவட்டத்தில் 5.3 ரிக்டல் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முலுகு மாவட்டத்தில் 40 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், டெல்லி போன்ற மாநிலங்களில் தான் எப்போது நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம். ஆனால், தற்போது தென் பகுதியில் உள்ள தெலங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவும் 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளில் முதல்முறையாக மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.