Telegana Youtuber: மயில் கறி சமைப்பது எப்படி? வீடியோ போட்ட யூடியுபர் மீது பாய்ந்த நடவடிக்கை..
யூடுயுபில் சமையல் சேனல்கள் லட்சக்கணக்கில் உள்ளது. தேங்காய சட்னி முதல் பன்றி இறைச்சி வரை சமைப்பது எப்படி என பதிவிடுகின்றனர். இதில் ஒருசிலர் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதற்காக சாதத்தில் ஐஸ் கிரீம் போட்டு சாப்பிடுவது, ஐஸ்கிரீம் பஜ்ஜி உள்ளிட்ட விஷயங்களை சமைத்து வீடியோவாக பதிவிடுகின்றனர். அந்த வரிசையில் தெலங்கானா யூடியுபர் ஒருவர் எல்லைமீறி சென்று மயில் கறி சமைப்பது எப்படி என குறிப்பிட்டு வீடியோ பதிவிட்டுள்ளார்.
தெலங்கானா யூடியூபர் கைது: தெலங்கானாவில் பிரபல யூடியூபர் பிரணாய் பாரம்பரிய மயில் கறி சமைப்பது எப்படி என்ற பெயரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து உண்மையை விசாரித்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார். பாராம்பரிய உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வரும் பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் மயிலை சமைத்து அந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், மயிலை கொல்வது சட்டவிரோதம் என்பதால் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றத்தை உறுதி செய்த பின் அவரை கைது செய்து விரைவில் சிறையில் அடைப்போம் எனவும் சிர்சில்லா மாவட்ட எஸ்.பி ராஜண்ணா உறுதியளித்துள்ளார்.
மேலும் படிக்க: சவரனுக்கு ரூ.1120 உயர்ந்த தங்கம் விலை.. ஒரு வாரத்துக்குள் எகிறிய ரேட்.. 6 நாள் விலை பட்டியல்
சர்ச்சைக்கு மத்தியில் பிரணாய் மயில் கறி சமைக்கும் வீடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து நீக்கியுள்ளார். இருப்பினும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உண்மையில் மயிலை கொன்று சமைத்தாரா? அல்லது லைக்ஸ் பெரும் நோக்கத்தில் வேறு ஏதேனும் கறியை சமைத்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் உண்மை கண்டறிந்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பெரும்பாலான நபர்கள் யூடியுபில் வீடியோக்களை போட்டு லைக்ஸ் வாங்கி வருமானத்தை ஈட்டு வருகின்றனர். லைக்ஸ் பெறுவதற்காக இன்று கண்ணில் காணும் விஷயங்களை எல்லாம் வீடியோவாக பதிவிடுகின்றனர். குறிப்பாக உணவு பிரியர்கள் பல உணவகங்களுக்கு சென்று வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டு அதனை விமர்சனம் செய்கின்றனர். இதனால் சாதாரணமாக இருக்கும் உணவகங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும் படிக்க: உலக யானைகள் தினம் இன்று ஏன் கொண்டாடப்படுகிறது..? பிரதமர் மோடி அளித்த உறுதி!
இது ஒரு பக்கம் இருக்க யூடுயுபில் சமையல் சேனல்கள் லட்சக்கணக்கில் உள்ளது. தேங்காய சட்னி முதல் பன்றி இறைச்சி வரை சமைப்பது எப்படி என பதிவிடுகின்றனர். இதில் ஒருசிலர் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதற்காக சாதத்தில் ஐஸ் கிரீம் போட்டு சாப்பிடுவது, ஐஸ்கிரீம் பஜ்ஜி உள்ளிட்ட விஷயங்களை சமைத்து வீடியோவாக பதிவிடுகின்றனர். அந்த வரிசையில் தெலங்கானா யூடியுபர் ஒருவர் எல்லைமீறி சென்று மயில் கறி சமைப்பது எப்படி என குறிப்பிட்டு வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை தொடர்ந்து அவர் பெரும் சிக்கலில் தற்போது சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.