5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.. மத்திய அரசு திடீர் அறிவிப்பு.. காரணம் என்ன?

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட், நெட் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக சர்ச்சைகள் நீடிக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வின் நடைமுறைகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதுநிலை நீட்  தேர்வு ஒத்திவைப்பு.. மத்திய அரசு திடீர் அறிவிப்பு.. காரணம் என்ன?
மாணவர்கள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 Jun 2024 10:12 AM

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட், நெட் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக சர்ச்சைகள் நீடிக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வின் நடைமுறைகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் குறித்து சுகாதார அமைச்சகம் வருத்தப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதியும், தேர்வு நடைமுறையில் நேர்மையை பராமரிக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read: சிக்கலில் 157 பல்கலைக்கழகங்கள்.. யு.ஜி.சி வெளியிட்ட பட்டியல்.. விவரம்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்தது, 1500க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது உள்ளிட்ட பல விஷயங்கள் சர்ச்சையை கிளப்பின. இதனால் நீட் தேர்வை ரத்து செய்து புதிய தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில், இளநிலை நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் இன்று நீட் முதுநிலை தேர்வு நடைபெற இருந்தது. இந்த தேர்வுக்கு லட்சகணக்கான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். மொத்தம் 259 நகரங்களில் இந்த தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த சூழலில் தான் முதுநிலை நீட் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also Read: நீட் வினாத்தாள் கசிவு.. கடும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு.. என்ன தண்டனை தெரியுமா?