இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா கெஜ்ரிவால்? காங்கிரஸ்க்கு ஷாக்!
Delhi Assembly Polls : சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது. டெல்லயில் மொத்தம் 70 இடங்கள் உள்ளன. இங்கு பெரும்பான்மை பெற 36 இடங்கள் தேவைப்படும். ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இதை தவிர பகுஜன் சமாஜ், ஆர்ஜேடி, லோக் ஜனசக்தி கட்சிகளும் களத்தில் உள்ளன. கடந்த இரு தேர்தல்களிலும் ஆம் ஆத்மி தொடர் வெற்றியை சந்தித்தது. 2015ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களையும், பாஜக 3 இடங்களையும் கைப்பற்றியது.
வரும் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி
2020ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றின. கடந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 2025 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் டெல்லி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வரும் நிலையில், பாஜக வெற்றியை பதிவு செய்ய தீவிரம் காட்டி வருகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இணைந்து போட்டியிட்டன. ஆனால் மக்களவை தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது.
Also Read : தெலுங்கானா எல்லையில் பதட்டம்.. என்கவுண்டரில் 7 மாவோயிஸ்ட் உயிரிழப்பு!
அக்டோபரில் ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, ஹரியானா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.
#WATCH | AAP national convener Arvind Kejriwal says, “There will be no alliance in Delhi (for assembly elections).” pic.twitter.com/KlPKL9sWrY
— ANI (@ANI) December 1, 2024
காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த கெஜ்ரிவால்
இந்த சூழலில் தான் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆம் ஆத்மி, காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்பது தெரிகிறது.
ஆம் ஆத்மி கட்சி தற்போது இந்தியா கூட்டணியில் உள்ளது. இதனால் வரும் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் கடந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டது.
இதனால் வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ், ஆம் ஆத்மி இணைந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி தனித்து தான் போட்டியிடும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம்.
Also Read : “என்னை இன்னும் வலிமையாக்குது” அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு அதானி பதிலடி!
மேலும், நேற்று கெஜ்ரிவால் மீது தண்ணீர் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையை நான் எழுப்பிய பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏதாவது நடவடிக்கை எடுப்பார் என்று நான் எதிர்பார்த்தேன்.. ஆனால், அதற்கு பதிலாக, எனது பாதயாத்திரையின் போது நான் தாக்கப்பட்டேன். என் மீது திரவம் வீசப்பட்டது. எனக்கு எதுவும் ஆகவில்லை. ஆனால் இது தீங்கு விளைவிக்க கூடிய ஒன்று” என்றார்.