5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: நாற்காலியில் கட்டி வைத்து டார்ச்சர்.. கொடூரமாக கொல்லப்பட்ட இளம் நடன ஆசிரியை.. பகீர் பின்னணி!

பெங்களூருவில் இளம் நடன ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அவரை கொலை செய்வதற்கு முன் பல மணி நேரம் டார்ச்சர் செய்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாற்காலியில் கட்டிவைத்து கொடுமைப்படுத்தி, கழுத்து அறுக்கப்பட்டும், கழுத்தை நெரித்தும் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

Crime: நாற்காலியில் கட்டி வைத்து டார்ச்சர்.. கொடூரமாக கொல்லப்பட்ட இளம் நடன ஆசிரியை.. பகீர் பின்னணி!
கொலை செய்யப்பட்ட பெண்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 31 Aug 2024 16:17 PM

நடன ஆசிரியைக்கு நடந்த கொடூரம்: பெங்களூருவில் இளம் நடன ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அவரை கொலை செய்வதற்கு முன் பல மணி நேரம் டார்ச்சர் செய்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு கெங்கேரி பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான நவ்ய ஸ்ரீ. இவர் நடன ஆசிரியராக இருந்தார். இவர் தனது கணவர் கிரனுடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நவ்யஸ்ரீ அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடன ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில்,  ஆகஸ்ட் 27ஆம் தேதி தோழி ஐஸ்வர்யாவுக்கு மெசேஜ் செய்திருக்கிறார். அன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் நவ்யஸ்ரீ வீட்டிற்கு ஐஸ்வர்யா வந்திருக்கிறார்.

அப்போது ஐஸ்வர்யாவிடன் தனக்கு பயமாக இருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நவ்யஸ்ரீ கூறியிருக்கிறார். மேலும், கணவர் கரண் கொடுக்கும் தொல்லையால், தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அவர்களிடம் கூறியுள்ளார்.  இதனை அடுத்து, மற்றொரு நண்பரான அனில் என்பவருக்கும் போன் செய்து இது பற்றி கூறியிருக்கிறார்.

Also Read: அலறிய குழந்தைகள்.. கடித்தே கொன்ற ஓநாய்கள்.. பாதி உடல் மட்டுமே மிச்சம் கிடந்த கொடூரம்!

அவரையும் சந்திக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதனை அடுத்து, இவர்கள் இருவரும் இரவு 7 மணியளவில் அனில் என்பவரை சந்தித்துள்ளனர். அப்போது தனக்கு நடக்கும் பிரச்னைகள் பற்றிய  நவ்யஸ்ரீ கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பின்னர், இரவு 11.30 மணியளவில் நவ்யஸ்ரீ மற்றும் அவரது தோழி ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் மது அருந்தி விட்டு அறையில் தூங்கியிருக்கின்றனர்.

பல மணி நேரம் டார்ச்சர் செய்து கொலை: 

அடுத்த நாள் எழுந்து ஐஸ்வர்யா பார்த்தபோது நவ்யஸ்ரீ சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் நவ்யஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றர்.

இதில், நவ்யஸ்ரீ மற்றும் அவரது கரணுக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனால், நவ்யஸ்ரீயை கணவன் கரண், மாற்று சாவி மூலம் வீட்டை திறந்து தனது மனைவியை கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் நவ்யஸ்ரீயை நாற்காலியில் கட்டிவைத்து கொடுமைப்படுத்தி, கழுத்து அறுக்கப்பட்டும், கழுத்தை நெரித்தும் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், நவ்யஸ்ரீ கொலை செய்யப்பட்டதற்கு குடும்ப பிரச்னை தான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News