Tirupati: திருப்பதி போக நினைக்கும் பக்தர்களே… இன்று முதல் ரெடியா இருங்க!

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நிகழும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. அதனால் தான் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். குறிப்பாக தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட திருப்பதி ஏழுமலையானை வழங்கினால் போதும் என நம்பப்படுகிறது. இந்த கோயிலில் இலவச தரிசனம், விஐபி தரிசனம், ரூபாய் 300 சிறப்பு கட்டணம் தரிசனம் உள்ளிட்ட பல வழிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

Tirupati: திருப்பதி போக நினைக்கும் பக்தர்களே... இன்று முதல் ரெடியா இருங்க!

கோப்பு புகைப்படம்

Updated On: 

21 Oct 2024 15:09 PM

திருப்பதி: உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வது நாளுக்கு நாள் கடினமான செயலாக மாறி வருகிறது. அதற்கு காரணம் உலகம் முழுவதும் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தான். பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அனைவரையும் சாமி தரிசனம் செய்யும் பலவிதமான நடவடிக்கைகளை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில்திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 19 ஆம் தேதி காலை 10 மணி முதல் 21 ஆம் தேதி வரை காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கான மின்னணு டிக்கெட்டுகளுக்காக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பக்தர்கள் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி  தரிசன சேவைக்கான டிக்கெட்டுகளை பெறலாம் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் அக்டோபர் 22ம் தேதி காலை 10 மணிக்கு ஜனவரி மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்ச சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீபம் அலங்கார சேவை ஆகியவற்றிற்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படும். இந்த சேவைக்கு நேரடியாக தரிசனம் செய்யாமல் மெய்நிகர் வழியாக சேவை செய்யும் வசதியும் உள்ளது. அதற்காக அக்டோபர் 22 ஆம் தேதி மாலை 3 மணி டிக்கெட் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Also Read:  Spiritual: பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்தால் இவ்வளவு நன்மைகளா?

மேலும் அக்டோபர் 23 ஆம் தேதி அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்களை காலை 10 மணி முதல் ஆன்லைனில் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடைவாளர்களுக்கான விஐபி தரிசன டிக்கெட் மட்டும் அறைகள் முன்பதிவு டிக்கெட்டுகள் அக்டோபர்  23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றத்திறனாளிகள் ஆகியவர்களுக்கான டிக்கெட்டுகள் அக்டோபர் 23 ஆம் தேதி மாலை 3 மணி முதல் ஆன்லைனில் பெறலாம் எனவும்,  ஜனவரி மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசனமான ரூ.300க்கான டிக்கெடுகள் அக்டோபர் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவு டிக்கெட் 24 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் வெளியிடப்படும் என்றும், திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள பக்தர்கள் அறைகள் ஜனவரி மாதத்திற்கு பெற அக்டோபர் 24 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவ்க்கப்பட்டுள்ளது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்  அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான https://www.tirumala.org/ அணுகவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஏற்கனவே வெளியிடப்படாமல் உள்ள நவம்பர், டிசம்பர் மாத டிக்கெட்டுகளும் விற்பனைச் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Saturn Retrograde: பிற்போக்கு நிலையில் சனி.. கவனமுடன் செயல்பட வேண்டிய 3 ராசிகள்!

திருப்பதியில் தரிசனம் செய்ய எளிய வழி

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நிகழும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. அதனால் தான் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். குறிப்பாக தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட திருப்பதி ஏழுமலையானை வழங்கினால் போதும் என நம்பப்படுகிறது. இந்த கோயிலில் இலவச தரிசனம், விஐபி தரிசனம், ரூபாய் 300 சிறப்பு கட்டணம் தரிசனம் உள்ளிட்ட பல வழிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதே சமயம் நடைபாதை வழியாக பாத யாத்திரை வரும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வரும் 31ஆம் தேதி வரையிலான ரூபாய் 300 சிறப்பு கட்டண டிக்கெட் பெரும்பாலும் விற்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் திருப்பதியில் செல்ல நினைக்கும் பக்தர்கள் தங்கள் பயணத்தை வரும் 31 ஆம் தேதிக்குள் திட்டமிட்டு சென்று வர ஒரு வாய்ப்பு உள்ளது.

மேலும் தற்போது புரட்டாசி பிரம்மோற்சவம் முடிந்துள்ள நிலையில் அடுத்த சில நாட்களுக்கு பக்தர்கள் கூட்டம் குறைவாக இருக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லட்டு சர்ச்சை சமீபத்தில் எழுந்தாலும் தொடர்ச்சியாக பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!