5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tirupati: வசூலை அள்ளும் திருப்பதி.. ரூ.921 கோடி பெறப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பு..

திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இங்கு வருகை தருவார்கள். உலகின் பணக்கார கடவுள் எனவும் அழைக்கபடுகிறது. கோடிக்கணக்கான மக்கள் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுமட்டுமின்றி இங்கு வரும் மக்கள் காணிக்கையாக ரொக்கம் மற்றும் தங்க ஆபரணங்களை வழங்குவார்கள்.

Tirupati: வசூலை அள்ளும் திருப்பதி.. ரூ.921 கோடி பெறப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 06 Sep 2024 22:50 PM

திருப்பதி: திருமலை வெங்கடாசலபதி – திருப்பதி வருமானம் பெருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், உண்டியல் வருமானமும் சாதனை படைத்து வருகிறது. பேரிடர்களை தீர்த்து வைக்கும் இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணமாக திருப்பதி தேவஸ்தான சொத்து மதிப்பும் அதிகரித்து வருகிறது. திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இங்கு வருகை தருவார்கள். உலகின் பணக்கார கடவுள் எனவும் அழைக்கபடுகிறது. கோடிக்கணக்கான மக்கள் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுமட்டுமின்றி இங்கு வரும் மக்கள் காணிக்கையாக ரொக்கம் மற்றும் தங்க ஆபரணங்களை வழங்குவார்கள்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை ரூ.921 கோடி வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையில்லா வைரம் மற்றும் தங்க ஆபரணங்கள் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் ஹூண்டி வருமானம் ரூ. 795.35 கோடி ஸ்ரீவாரி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வாயில் ராஜ நாகம் வைத்து ரீல்ஸ்.. லைக்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்..

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.116.46 கோடியும், பிப்ரவரியில் ரூ.111.71 கோடியும், மார்ச் மாதம் ரூ.118.49 கோடியும், ஏப்ரல் மாதம் ரூ.101.63 கோடியும், மே மாதம் ரூ.108.28 கோடியும், ஜூன் மாதம் ரூ.113.64 கோடியும், ஜூலை மாதம் ரூ.125.35 கோடியும், ஆகஸ்டு மாதம் ரூ.125.35 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் 22.42 லட்சம் பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்ததாகவும், ஸ்ரீவாரி உண்டி வருமானம் ரூ. 125.67 கோடி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.06 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், 24.33 லட்சம் பேர் பிரசாதம் பெற்றதாகவும் தெரிவித்தனர். ஆகஸ்ட் மாதத்தில் 9.49 லட்சம் பக்தர்கள் தலவிருட்சம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு கோவில்களுக்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:  உலகில் அதிக ஊழியர்களை கொண்ட 10 நிறுவனங்கள்.. பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு இந்திய நிறுவனம்.. எது தெரியுமா?

மேலும், ஏழு மாதங்களுக்கு முன்பு திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்து விவரங்களையும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. 24 வங்கிக் கணக்குகளில் உள்ள நிரந்தர வைப்பு மற்றும் தங்க டெபாசிட் விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தக் கணக்கீடுகளின்படி, அக்டோபர் 31, 2023க்குள் ரூ. 17,816.15 கோடி ரொக்க டெபாசிட்கள், தங்க வைப்புகளும் இருப்பதாக குறிப்பிடப்பட்டது.

Latest News