Tirupati Laddu: ”மாட்டு கொழுப்பு.. மீன் எண்ணெய்” திருப்பதி லட்டு குறித்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
திருப்படி லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்து நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டப்பட்ட நிலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்படி லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு இருந்தபோது, புகழ்பெற்ற திருப்பதி லட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதை குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் உள்ள கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையம் ஆய்வகத்தின் அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.மேலும், லட்டில் கலக்கப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Lab report of samples sent from Tirumala Tirupati Devasthanam that were sent to National Dairy Development Board in Gujarat for testing.
TDP spokesperson Anam Venkata Ramana Reddy says, “…The lab reports of samples certify that beef tallow and animal fat – lard, and fish oil… https://t.co/jwHKaS3erw pic.twitter.com/9eZasbkewh
— ANI (@ANI) September 19, 2024
”மாட்டு கொழுப்பு.. மீன் எண்ணெய்”
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்து நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டப்பட்ட நிலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அமராவதியில் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஆந்திராவில் கடந்த ஜூன் மாதம் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
Also Read: கனடா செல்ல பிளானா? இந்திய மாணவர்களுக்கு புது சிக்கல்.. கஷ்டம் தான் ரொம்ப!
ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய அரசின் கீழ் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலையும், திருப்பதி தேவஸ்தானத்தையும் நிர்வகித்து வந்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திருமலையின் புனிதத்தை கெடுத்துவிட்டனர். அன்னதானத்தின் தரத்தில் சமரசம் செய்து, புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி மாசுபடுத்தியுள்ளனர்.
நாங்கள் இப்போது பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில் சுத்தமான நெய்யைப் பயன்படுத்துகிறோம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தை பாதுகாக்க நாங்கள் பாடுபடுகிறோம்” என்று குற்றச்சாட்டினார் சந்திரபாபு நாயுடு. இதற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆய்வில் அதிர்ச்சி தகவல்:
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான ஒய்வி சுப்பா ரெட்டி, திருமலை கோவிலின் புனிதத்தை நாயுடு சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். சந்திராபாபு நாயுடு முன்வைத்த கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை தெலுங்கு தேசம் கட்சி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் வெங்கட்ராமனா ரெட்டி ஊடகங்களுக்கு வெளியிட்டார்.
குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் உள்ள கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையம் ஆய்வகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வக அறிக்கையின்படி, சோயாபீன், சூரியகாந்தி, ஆலிவ், கோதுமை பீன்ஸ், சோளம், பருத்தி விதை, மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு, பாமாயில் மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு ஆகியவையும் பக்தர்களுக்கு தரப்படும் திருப்பதி லட்டுவில் சேர்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மறுக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்:
இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான ஒய்வி சுப்பா ரெட்டி கூறுகையில், “சந்திரபாபு நாயுடு திருமலையின் புனிதத்தையும், கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளார். திருமலை பிரசாதம் குறித்த அவரது கருத்துகள் மிகவும் தவறானது. அரசியல் ஆதாயத்துக்காக சந்திரபாபு நாயுடு எந்த நிலைக்கும் செல்வார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
Also Read; 3வது முறையாக ஆட்சி அமைத்த பாஜக கூட்டணி.. 100 நாட்களில் செய்த சாதனைகள் என்ன?
பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும் எனது குடும்பத்தினரும் திருமலை பிரசாதம் குறித்து சர்வவல்லவர் அந்த எழுமலையான் முன் சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்து சந்தியம் செய்ய தயாராக இருக்கிறாரா?” என கேள்வி எழுப்பியிருந்தார். திருப்பதி என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது லட்டு தான். இப்படி பக்தர்களிடையே மிகவும் விருப்பமாக உள்ள லட்டு குறித்து அடுத்தடுத்த வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.