5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tirupati Laddu Controversy: திருப்பதி லட்டு சர்ச்சை.. பெருமாளை வேண்டி 11 நாட்கள் தவம் இருக்கும் பவன் கல்யாண்..!

Pawan Kalyan: லட்டு பிரசாதம் விவகாரத்தில் ஆந்திர பிரதேசத்தின் துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் பிராயச்சித்தம் செய்ய முடிவு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று முதல் 11 நாள் தவ விரதத்தை தொடங்குகிறார். பவன் கல்யாணி 11 நாட்கள் தவம் தீட்சை அதாவது உண்ணாவிரதம் இருக்க போவதாக தெரிவித்துள்ளார். இது தற்போது ஆந்திராவில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tirupati Laddu Controversy: திருப்பதி லட்டு சர்ச்சை.. பெருமாளை வேண்டி 11 நாட்கள் தவம் இருக்கும் பவன் கல்யாண்..!
பவன் கல்யாண் (Image: suryareddy/twitter)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 22 Sep 2024 16:05 PM

உலக புகழ்பெற்ற திருப்பதி பாலாஜியின் கோயிலின் லட்டு பிரசாதத்தில் மாடு, பன்றி மற்றும் மீனின் நெய் கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விஷயங்களை தெரிவித்து அரசியலிலும் இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார். தற்போது இந்த விவகாரத்தில் ஆந்திர பிரதேசத்தின் துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் பிராயச்சித்தம் செய்ய முடிவு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று முதல் 11 நாள் தவ விரதத்தை தொடங்குகிறார். பவன் கல்யாணி 11 நாட்கள் தவம் தீட்சை அதாவது உண்ணாவிரதம் இருக்க போவதாக தெரிவித்துள்ளார். இது தற்போது ஆந்திராவில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: Tirupati Laddu Controversy: “மாட்டு கொழுப்பு..” லட்டு விற்பனை மூலம் திருப்பதி கோயிலுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா?

இதுகுறித்து பவன் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலாஜி பிரபு! என்னை மன்னியுங்கள் இறைவா. மிகவும் புனிதமானதாக கருதப்படும் திருமலை லட்டு பிரசாதத்தில் முந்தைய ஆட்சியாளர்களின் கட்டுக்கடங்காத போக்கின் விளைவாக தூய்மையற்றதாகிவிட்டது. விழுங்கு நெய் எச்சங்களால் லட்டு மாசுப்பட்டது. குரூரமான மனம் கொண்டவர்களே இத்தகைய பாவங்களை செய்கிறார்கள். இந்த பாவத்தை ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாமல் இருப்பது இந்து மதத்திற்கு களங்க போன்றது.

லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் நெய் இருப்பதை அறிந்தவுடன், நான் கலக்கமடைந்தேன். நான் குற்ற உணர்ச்சியில் தவித்து வருகிறேன். நான் முழுவதும் மக்கள் நலனுக்காக போராடுகிறேன். இதில், வருத்தமான விஷயம் என்னவென்றால், இதுபோன்ற ஒரு பிரச்சனை ஆரம்பத்தில் என் கவனத்திற்கு வரவில்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.

தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பவன் கல்யாண், “ சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் கலியுகத்தின் கடவுள் பாலாஜிக்கு செய்த இந்த கொடூரமான பாவத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும். இந்த உணர்விந்தான் நானும் பரிகாரத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளேன். ஞாயிற்றுக்கிழமை (இன்று) செப்டம்பர் 22ம் தேதி காலை குண்டூர் மாவட்டம் நம்பூரில் உள்ள ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் தீட்சை எடுப்பேன். 11 நாட்கள் தீர்சை தொடர்ந்த பிறகு திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசனம் செய்வேன். கடவுளே… உமக்கு இழைத்த பாவங்களை கழுவும் சக்தியை தருமாறு வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

தொடர்ந்து, “ கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மற்றும் பாவங்களை செய்ய பயப்படாதவர்கள் மட்டுமே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். திருமலை திருப்பது தேவஸ்தான அமைப்பில் அங்கம் வகிக்கும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கூட அங்குள்ள தவறுகளை கண்டறிய முடியாமல் இருப்பது எனது வருத்தம். அதை கண்டுபிடுத்தாலும் வெளியே சொல்ல மாட்டார்கள். அன்றைய பேய் நாட்டம் கொண்ட ஆட்சியாளர்களுக்கு அவர்கள் பயந்ததாக தெரிகிறது.

ALSO READ: Tirupati Laddoo : திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்.. வலுக்கும் கண்டனம்.. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி!

உண்மையான வைகுண்டத் தலமாகக் கருதப்படும் திருமலையின் புனிதம், கல்வி, மதக் கடமைகளைக் கண்டித்த முந்தைய ஆட்சியாளர்களின் நடத்தை இந்து மதத்தைப் பின்பற்றும் அனைத்து மக்களையும் புண்படுத்தியுள்ளது. லட்டு பிரசாதம் தயாரிப்பதில் விலங்குகளின் எச்சங்கள் அடங்கிய நெய் பயன்படுத்தப்பட்டதால் மனமும் மிகவும் தொந்தரவு செய்யப்படுகிறது. மதத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ்” என பதிவிட்டுள்ளார்.

என்ன நடந்தது..?

லட்டுகளில் மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த லட்டுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோக்கியப்பட்டது மட்டுமல்லாமல், இந்த லட்டுகள் பிரசாதமாகவும் வழங்கப்பட்டது. இதை கடந்த செப்டம்பர் 19ம் தேதி ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி பாலாஜி கோயிலில் வழங்கப்படும் விலங்குகளின் கொழுப்பை முந்தையை ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசு கலந்ததாக குற்றம் சாட்டினார்.

Latest News