Tirumala Tirupati: வீடுகளில் 6 மணிக்கு இதை பண்ணுங்க.. தோஷம் போகும்.. திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்!
திருப்பதி லட்டு: பக்தர்கள் இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருப்பதி லட்டின் புனிதம் கேட்டுள்ளதாக தோஷம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு பரிகாரமாக இன்று மாலை வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் தேவஸ்தானம் கூறியுள்ளது. மேலும், ஓம் நமோ நாராயண என்ற மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
பக்தர்கள் இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருப்பதி லட்டின் புனிதம் கேட்டுள்ளதாக தோஷம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு பரிகாரமாக இன்று மாலை வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் தேவஸ்தானம் கூறியுள்ளது. மேலும், ’ஓம் நமோ வெங்கடேசாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே நமஹ’ என்ற மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. திருப்பதி எழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில் மாட்டு கொழுப்பு, மீண் எண்ணெய் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்புயுள்ளது. முந்தைய ஜெகன் மோகன் ஆட்சி நிர்வாகமே இதற்கு காரணம் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்:
ஆளும் கட்சி குற்றச்சாட்டி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மறுத்தே வருகின்றனர். குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் உள்ள கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையம் ஆய்வகத்தின் அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. இது பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தோஷம் நீங்க பக்தர்கள் இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Purificatory Shanti Homam Concludes
Ritual Held to Ward Off Doshas and for the Benefit of Devotees – TTD EO
Devotees Should Recite the Kshama Mantra in the Evening – Archakas pic.twitter.com/I9EMID0XtC
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) September 23, 2024
முன்னதாக இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை திருமலை திருப்பதி கோயிலில் சாந்தி யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து எழுமலையான் கோயிலின் பிரசாத தயாரிப்பு கூடம், லட்டு விநியோக கவுண்டர் உள்ளிட்டட இடங்களில் பசுவின் கோமியம் கலந்த பஞ்சகாவியா தெளிக்கப்பட்டு குங்கிலிய புகை காட்டப்பட்டது.
Also Read: த.வெ.க மாநாடு.. தொண்டர்களுக்கு 8 கண்டிஷன் போட்ட புஸ்ஸி ஆனந்த்!
திருப்பதில் கோயில் வழங்கப்படும் லட்டுவில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டதால் தோஷம் ஏற்பட்டுள்ளதாகவும், தோஷம் நீங்க இதுபோன்ற நடவடிக்கையை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணை:
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு 8 பக்க கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “அரசியல் நோக்கங்களுக்காக முற்றிலும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் அளவுக்கு சந்திரபாபு நாயுடு தாழ்ந்துள்ளார்.
இந்த முக்கியமான தருணத்தில் ஒட்டுமொத்த நாடும் உங்களைப் பார்க்கிறது. பொய்களைப் பரப்பும் வெட்கமற்ற செயலுக்காக சந்திரபாபு நாயுடுவை கடுமையாகக் கண்டிக்கப்படுவதும், உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதும் மிகவும் அவசியம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் மனு:
திருப்பதி லட்டு விவாகரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக தடயவியல் ஆய்வக அறிக்கையில் தெரியவந்துள்ளது.
Also Read: உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழை தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கை!
லட்டு தயாரிக்க தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிமன்ற கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பொதுமக்களின் ஆன்மீக மற்றும் சுகாதார நலன்களைப் பாதுகாக்க வெளிப்படைத்தன்மை இருக்கு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.