5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tirupati Laddu : ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போர்டு புகார்.. நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்ததாக புகார்!

Laddu Issue | திருப்படி லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும், திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

Tirupati Laddu : ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போர்டு புகார்.. நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்ததாக புகார்!
ஏஆர் டெய்ரி நிறுவனம்
vinalin
Vinalin Sweety | Published: 25 Sep 2024 15:12 PM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் பன்றி கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போர்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில் தேவஸ்தானம் போர்டு ஏன் இந்த நிறுவனந்த்தின் மீது புகார் அளித்துள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Harassment : ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்!

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய்

திருப்படி லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும், திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு இருந்தபோது, புகழ்பெற்ற திருப்பதி லட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதை குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் உள்ள கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையம் ஆய்வகத்தின் அறிக்கை மூலம் வெளிவந்ததுது.

இதையும் படிங்க : TVK Meeting: தள்ளிப்போகிறதா விஜய்யின் த.வெ.க மாநாடு.. மீண்டும் ஒரு புதிய சிக்கல்..

திருப்பதில் லட்டில் விலங்கு கொழுப்பு – வலுக்கும் கண்டனங்கள்

மேலும், லட்டில் கலக்கப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து கோயில்களிலும் சோதனை நடத்தப்படும் என்றும் தற்போதைய அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert:உஷார் மக்களே..! கொளுத்தப்போகும் வெயில்.. வானிலை கொடுத்த எச்சரிக்கை..

திருப்பதி லட்டுக்கு நெய் வழங்கிய நிறுவனம் மீது தேவஸ்தானம் போர்டு புகார்

இந்த நிலையில், திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கி வந்த திண்டுக்கலை சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனந்த்தின் மீது திருப்பதி தேவஸ்தானம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. தேவஸ்தானம் போர்டு அளித்துள்ள அந்த புகாரில், திண்டுக்கலை சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனம் திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்து, 4 டேங்கர் லாரிகளில் விநியோகம் செய்ததாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.

இதையும் படிங்க : J&K Election: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.. வெற்றிக்கனி யாருக்கு?

நெய்யின் தரத்தை நிரூபிக்க தயார் – ஏஆர் டெய்ரி நிறுவனம்

திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் மாட்டு கொழுப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்த போதே, இந்த ஏஆர் டெய்ரி நிறுவனம் தங்களது நெய்யின் தரத்தை எங்கு வேண்டுமானாலும் சென்று நிரூபிக்க தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் போர்டு இவ்வாறு புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக திருப்பதி லட்டின் புனிதத்தை மீட்டு எடுக்கும் வகையில், திருப்பதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி பொதுமக்களின் வீடுகளில் 6 மணிக்கு விளக்கு ஏற்றவும் அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest News