TN MPs Swearing-in: நாடாளுமன்றத்தில் எதிரொலித்த உதயநிதி பெயர்.. தமிழில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள்!
18வது மக்களவை கூட்டத் தொடரின் முதல் அமர்வு நேற்று தொடங்கியது. புதிய அரசாங்கம் அமைந்ததைத் தொடர்ந்து கூட்டப்பட்ட முதல் கூட்டத்தொடர் என்பதால் புதிய எம்பிக்கள் நேற்று பதவி ஏற்று கொண்டனர். இரண்டாவது நாளான இன்றும் எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் பதவியேற்றபோது, நாடாளுமன்றத்தில் கருணாநிதி, ஸ்டாலின் உதயநிதி, தமிழ் வாழ்க என முழக்கமிட்டனர்.
தமிழில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள்: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன. 240 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. தனிபெரும்பான்மை 272 கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்திய அக்கட்சி ஆட்சியமைத்தது. இதற்கிடையில், 18வது மக்களவை கூட்டத் தொடரின் முதல் அமர்வு நேற்று தொடங்கியது. புதிய அரசாங்கம் அமைந்ததைத் தொடர்ந்து கூட்டப்பட்ட முதல் கூட்டத்தொடர் என்பதால் புதிய எம்பிக்கள் நேற்று பதவி ஏற்று கொண்டனர். இரண்டாவது நாளான இன்றும் எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் பதவியேற்றபோது, நாடாளுமன்றத்தில் கருணாநிதி, ஸ்டாலின் உதயநிதி, தமிழ் வாழ்க என முழக்கமிட்டனர்.
#18thLokSabha: T.R. Baalu, (DMK) takes oath as Member of Parliament (Sriperumbudur, Tamil Nadu ) #Parliament | #LokSabha #RajyaSabha #parliamentsession @LokSabhaSectt pic.twitter.com/a9HEqcMSxS
— SansadTV (@sansad_tv) June 25, 2024
Also Read: வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்!
நாடாளுமன்றத்தில் ஒலித்த கருணாநிதி, உதயநிதி பெயர்கள்:
முதலில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் பதவியேற்றார். அரசியல் சாசனப் புத்தகத்துடன் தமிழில் உறுதி மொழியேற்ற சசிகாந்த் செந்தில், வாழிய வையகம், வாழ்க தமிழ் என முழக்கமிட்டார். சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று முழக்கமிட்டார். பின்னர், மத்திய சென்னை எம்.பி தயாநதி மாறன் பதவியேற்கும்போது வாழ்க தமிழ், வாழ்க பெரியார், வாழ்க அண்ணா, வாழ்க முத்துவெல் கருணாநிதி ஸ்டாலின், வாழ்க உதயநிதி ஸ்டாலின், நீர் வேண்டாம் என முழக்கமிட்டார். தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பதவியேற்றபோது, வாழ்க தமிழ், வளர்க் முத்தமிழறிஞர் புகழ், வாழ்க தலைவர் தளபதி என முழக்கமிட்டார். மேலும், திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வாழ்க தமிழ்நாடு, வெல்க திமுக, வாழ்க தளபதி ஸ்டாலின், வருங்காலம் எங்கள் உதயநிதி என்று முழக்கமிட்டார்.
#18thLokSabha: Dayanidhi Maran , (DMK) takes oath as Member of Parliament (Chennai Central, Tamil Nadu )#Parliament | #LokSabha #RajyaSabha #parliamentsession @LokSabhaSectt pic.twitter.com/yrXEO8mQWE
— SansadTV (@sansad_tv) June 25, 2024
அதேபோல, சி.என்.அண்ணாதுரை, தரணிவேந்தன் உள்ளிட்ட எம்.பிக்களும் வருங்காலம் எங்கள் உதயநிதி என்று குறிப்பிட்டனர். அதேநேரத்தில் நீலகிரி எம்.பி. ஆ.ராஜா, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, ஸ்ரீபெரும்புதூர் எம்.பி டி.ஆர்.பாலு ஆகியோர் எந்தவொது முழக்கங்களும் இல்லாமல் பதவியேற்றுக்கொண்டனடர். இவர்களைத் தொடர்ந்து, நாமக்கல் மாதேஸ்வரன், ஈரோடு பிரகாஷ், பெரம்பலூர் அருண் நேரு, கரூர் ஜோதிமணி என பலரும் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Also Read: முதல் மழைக்கே தாங்காத ராமர் கோயில்.. மேற்கூரையில் கசிவு – தலைமை அர்ச்சகர்..!