5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன? இன்றைய முக்கியச் செய்திகள்..

உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Today’s Top News Headlines: நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன? இன்றைய முக்கியச் செய்திகள்..
டாப் 10 செய்திகள்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 02 Jul 2024 21:42 PM

தமிழ்நாடு:

  • விக்கிரவாண்டி  தேர்தலில் அதிமுகவின் வாக்கு திமுக்காவுக்கே கிடைக்கும் – அமைச்சர் ஏ.வ வேலு தகவல்
  • தமிழகத்தில் அரசு கலைக்கல்லூரியில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு
  • மதுரை எய்மஸ் மருத்துவமனை கட்டுமானத்தில் எந்த தடையும் இருக்காது – நிர்வாகம் அறிவிப்பு, தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்
  • அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அறிவிப்பு
  • தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரதர தீர்வு வேண்டும் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
  • தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
  • தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தான் சாதி மோதல்கள் தலைவிரித்து ஆடுகிறது – வானதி ஸ்ரீனிவாசன்

Also Read: ஹத்ராஸ் கூட்ட நெரிசல் கொடூரம்.. விபத்து நடந்தது எப்படி?

இந்தியா:

  • குரலும் ஆட்சியும் வலுவாக உள்ளது,குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேச்சு
  • உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் பயங்கர விபத்து ஏற்பட்டது. ஆன்மிக நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவத்தில் 87 பேர் இதுவரை உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹத்ராஸ் மாவட்டத்தின் சிக்கந்தரா ராவ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புல்ராய் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
  • அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தனது உரையை மீண்டும் அவையில் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம்
  • ராகுல் காந்தியை குழந்தை என மக்களவையில் விமர்சித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினர் அமளிக்கு மத்தியில் உரை
  • உத்திர பிரதேசத்தில் ஹத்ராஸ் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு அறிவிப்பு

உலகம்:

  • கென்யாவில் வரி உயர்வுக்கு எதிராக மக்கள போராட்டம் – 39 பேர் உயிரிழப்பு, 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்
  • உக்ரைன் போரை டிரம்ப் ஒருநாளில் நிறுத்திவிடுவாரா? ரஷ்யாவின் ஐநா தூதர் பதிலடி
  • காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் – 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
  • நடு வானில் குளுங்கிய ஏர் யுரோப்பா விமானம் – 30 பயணிகள் படுகாயம்

விளையாட்டு:

  • விம்பிலள்டன் டென்னில் போட்டி: எலினா ரைபகினா 2 வது சுற்றுக்கு முன்னேற்றம்
  • விம்பிலள்டன் டென்னில் போட்டி: 2வது சுற்றுக்கு  முன்னேறினார் ஜெகிசா பெகுலா
  • லங்கா பிரீமியர் லீக்:  நிசாங்கா பெர்ணாண்டோ அரைசதம் ஜாப்னா கிங்ஸ் 177 ரன்கள் குவுப்பு

Also Read: கிரெடிட் கார்டு பில் பேமெண்டில் மாற்றம்.. இனி இதுதான் நடைமுறை!